பயணிகள் வானூர்தி பாதுகாவலர் (sky marshal), என்பவர் வானூர்தி செல்வழிக்கடத்தல்களை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு பயணிகள் விமானத்திலும் நியமிக்கப்படும் ஒரு இரகசிய சட்ட அமலாக்க அல்லது பயங்கரவாத எதிர்ப்பு முகவர் ஆவார். இத்தகைய முகவர் வானூர்தியின் பாதுகாப்பு அதிகாரி (IFSO) என்றும் அறியப்படுகிறார்.[1][2] வானூர்தி பாதுகாவலர்களை அந்தந்த நாட்டின் அரசால் நியமிக்கப்படுவார். வானூர்தி பாதுகாவலர் சீருடையின்றி, சாதாரண பயணிகள் போன்று, விமான ஓட்டியின் அறைக்கு வெளியே உள்ள முதல் வகுப்பில் பயணிப்பர். இவர்கள் விமானத்தில் தூங்காது, விழிப்புடன் இருப்பர். இந்த வானூர்தி பாதுகாவலர்கள் கைத் துப்பாக்கியில் தீப்பிடிக்காத வெடிக்காத இரப்பர் குண்டுகளை பயன்படுத்துவர்.
வானூர்திக் கடத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிறுவனம் (FAA) மார்ச் 1962 முதல் தொடங்கியது. ஆஸ்திரியா 1981ஆம் ஆண்டு முதல் இச்சேவையைத் தொடங்கியது.1999இல் கந்தகார் விமானக் கடத்தல்[3] மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தியப் பயணிகள் விமானங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர், வான் பாதுகாவர்களாக நியமிக்கப்பட்டனர்.[4] செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் ஆஸ்திரேலியா[5][6],17 செப்டம்பர் 2022 முதல் கனடா தனது விமானங்களில் வானூர்தி பாதுகாப்பு காவலர்களை நியமித்தது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)