வாராணசி நகரத் தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம், | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தே.நெ. 2 ஜெய்த்புரா, வாரணாசி, உத்தரப்பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 25°20′04″N 83°00′52″E / 25.334332°N 83.014485°E | ||||
ஏற்றம் | 76.7 மீட்டர் (251.7 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | வாராணசி-சாப்ரா வழித்தடம் கோரக்பூர்-மா-பிரயாக்ராஜ் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
தொடருந்து இயக்குபவர்கள் | இந்திய இரயில்வே | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | BCY | ||||
மண்டலம்(கள்) | வகிதொம | ||||
கோட்டம்(கள்) | வாராணசி தொடருந்து மண்டலம் | ||||
பயணக்கட்டண வலயம் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
|
வாராணசி நகரத் தொடருந்து நிலையம் (Varanasi City railway station) வாராணசியில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது வாராணசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் 4 கி.மீ. தொலைவிலும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வடகிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தின் தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வாராணசி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் பயணிப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக இந்த முனையம் செயல்படுகிறது.
வாராணசி நகரத் தொடருந்து நிலையத்தில், ஐந்து நடைமேடைகள் உள்ளன, கூடுதலாக 8 நடைமேடைகளுக்கான வசதிகள் உள்ளன. நிலையத்திற்கு ஒரு நுழைவாயில் உள்ளது. வாராணசி சந்திப்பில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாண்டுவாடி ரயில் நிலையத்தையும், வாராணசி நகர ரயில் நிலையத்தையும் கூடுதல் நிலையங்களாக மேம்படுத்த இரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இப்போது, வாராணசி நகரம் வடகிழக்கு தொடருந்து மண்டலத்தின் (வாராணசி நகரப் பிரிவு) தலைமை நிலையமாகும். முன்னதாக வாராணசி சந்திப்பு வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகமாக இருந்தது. பின்னர் வடகிழக்கு ரயில்வே இந்த தலைமையகத்தை மாற்றியது. வாராணசி சந்திப்பு வடக்கு தொடருந்து மண்டலத்தின் கீழ் வருவதால், இலக்னோ சார்பாக் கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த நிலையம் காஜிபூர், மாவ், தர்பங்கா, சாப்ரா, மும்பை, இலக்னோ, கோரக்பூர், கான்பூர் போன்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[1][2]
ரயில் எண் | ரயில் பெயர் | புறப்படும் இடம் | சேருமிடம் |
---|---|---|---|
15007 | கிரிஷாக் எக்ஸ்பிரஸ் | வாராணசி நகரம் | இலக்னோ |
15552 | வாராணசி சிட்டி-தர்பங்கா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் | வாராணசி நகரம் | தர்பங்கா |
55132 | வாராணசி சிட்டி-சாப்ரா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் | வாராணசி நகரம் | சப்ரா |
ரயில் எண் | ரயில் பெயர் | புறப்படும் இடம் | சேருமிடம் |
---|---|---|---|
55014 | பயணிகள் | வாராணசி நகரம் | சப்ரா |
55120 | பயணிகள் | வாராணசி நகரம் | கோரக்பூர் |
55132 | பயணிகள் | வாராணசி நகரம் | சப்ரா |
75114 | பயணிகள் (டெமு ) | வாரணாசி நகரம் | பட்னி |
55134 | பயணிகள் | வாராணசி நகரம் | பாலிலா |
63297 | பயணிகள் (மெமு ) | வாரணாசி நகரம் | பாலிலா |
55136 | பயணிகள் | வாராணசி நகரம் | அசாம்கார்க் |
55150 | பயணிகள் | வாராணசி நகரம் | கோரக்பூர் |