வாரிஸ் அலி ஷா (Waris Ali Shah) (1817-1905) என்பவர் இந்திய மாநிலமான பீகாரின் பாராபங்கி மாவட்டத்திலுள்ள தேவாவைச் சேர்ந்த ஒரு சூபித் துறவியும், வார்சி சூபி ஒழுங்கின் நிறுவனரும் ஆவார். இவர் மேற்கில் பரவலாகப் பயணம் செய்து, மக்களை தனது ஆன்மீக ஒழுங்கில் சேர்த்துக்கொண்டார். இவர் ஹஸ்ரத் இமாம் உசேனின் 26 வது தலைமுறையைச் சேர்ந்தவர்.[2] இவரது தர்கா இந்தியாவின் தேவாவில் உள்ளது. [3][4] இவர், சிறு வயதிலேயே ஒரு மத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கொண்டார்.[5]
"இசுலாமிய விமர்சனமும் முஸ்லிம் இந்தியாவும்" என்ற புத்தகத்தில் (கிராஸ் மறுபதிப்பு, 1971), இயேசு வாழ்ந்தபடியே வாரிஸ் அலி ஷா தனது வாழ்க்கையை வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[6]
வாரிஸ் அலி ஷா சூபித்துவத்தின் கதிரியா ஒழுங்கைச் சேர்ந்தவர். [12] இவர் ஒரு தாராளவாத பார்வையைக் கொண்டிருந்தார். இவரைப் பின்பற்றுபவர்களுக்கு சூஃபித்துவத்தைப் பின்பற்ற அனுமதித்தார். ஒருவர் இசுலாத்தை ஏற்றுக்கொண்டால் பெயர்கள் மாற்றப்படக்கூடாது என்பது இவரது கொள்கையாகும். [13]
இவரது தந்தையான குர்பன் அலி ஷாவின் கல்லறை தேவாவில் உள்ளது.[16] இவரது தந்தையின் நினைவு நாள் விழா, உள்ளூரில் தேவா மேளா என்று அழைக்கப்படுகிறது. இது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அனுசரிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் என்ற அளவில் முஸ்லிம்களும், இந்துக்களும் கலந்து கொள்கின்றனர்.[9][17][18][19]
ஷா தனது தந்தை குர்பன் அலி ஷாவின் நினைவாக இந்த நிகழ்வை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மற்றொரு வருடாந்திர கண்காட்சி சஃபர் முதள் நாள் அன்று இவரது கல்லறையில் நடத்தப்படுகிறது.[20][21][22]