வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | தி கம்யூனிட்டி மீடியா டிரஸ்ட் |
வெளியீட்டாளர் | அப்துசலாம் புதிகே |
ஆசிரியர் | அப்துசலாம் புதிகே |
நிறுவியது | ஆகஸ்ட் 29, 2003 |
அரசியல் சார்பு | இடதுசாரி |
மொழி | கன்னடம் |
தலைமையகம் | மங்களூர், கர்நாடகா. |
சகோதர செய்தித்தாள்கள் | சுகீ, கல்ஃப் பாரதி, ஹெஜ்ஜே குருது |
இணையத்தளம் | http://vbepaper.com/ http://vbnewsonline.com/home/ |
வார்த்தா பாரதி என்பது கர்நாடகாவில் வெளியாகும் கன்னட நாளேடு. இது மங்களூர், பெங்களூர் என இரண்டு பதிப்புகளில் வெளியாகிறது. இதன் தலைமையகம் மங்களூரில் உள்ளது.[1]. கர்நாடகாவிற்கு வெளியே, அரபு நாடுகளிலும் விற்கப்படுகிறது.
அரசியல், அறிவியல், சுற்றுச்சூழல், கல்வி, பண்பாடு, மனமகிழ்வு தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. அரசியல் பிரச்சனைகள் தொடர்பான பேட்டிகளும், விவாதங்களும் இடம்பெறுகின்றன. நாள்தோறும் கன்னட எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் தனிப் பகுதிகளில் எழுதுகின்றன. குழந்தைகளுக்காக படங்களுடன் கூடிய கதைகளும் இணைப்பாக `வருகின்றன.