வாலி கட்டுவிரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பங்காரசு
|
இனம்: | ப. வாலி
|
இருசொற் பெயரீடு | |
பங்காரசு வாலி வால், 19071907 | |
வேறு பெயர்கள் [2] | |
|
வாலி கட்டுவிரியன்[a] எனும் பங்காரசு வாலி (Bungarus walli) என்பது வட இந்தியா, வங்காளதேசம், நேபாளம், மற்றும் பூட்டானில் காணப்படும் ஒரு நச்சுப் பாம்பு ஆகும்.[1][2] இது முன்பு பங்காரசு சிண்டனசு சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு தனிச்சிற்றினமாகக் கருதப்படுகிறது.[1] இது சிந்து கட்டுவிரியன் என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
இங்கிலாந்து ஊர்வனவியலாளர் பிராங்க் வால் நினைவாக இந்தச் சிற்றினம் பெயரிடப்பட்டது. தனது பெயரையே சூட்டியதால் வால், தான் "நெறிமுறைகளை மீறியதாக" ஒப்புக் கொண்டார்.[3][4]
ப. வாலி காடுகள், விவசாய நிலங்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. இது உள்ளூர் அளவில் பரவலாகக் காணப்படுகிறது.[1]