வால்டர் மைன்டர் Walter Minder | |
---|---|
பிறப்பு | சுவிட்சர்லாந்து, சீலேண்டு | ஆகத்து 6, 1905
இறப்பு | ஏப்ரல் 1, 1992 சுவிட்சர்லாந்து , பெர்ன் | (அகவை 86)
தேசியம் | சுவிசு |
பணியிடங்கள் | பெர்ன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்ன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | எமில் இயுகி |
வால்டர் மைன்டர் (Walter Minder) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர் ஆவார் [1]. இவர் 1905 ஆம் ஆண்டு ஆகத்து ஆறாம் தேதியன்று பிறந்தார். அலைசு லீயிக் சுமித்துடன் இணைந்து 1940 ஆம் ஆண்டு 85 என்ற அணு எண்ணால் அடையாளப்படுத்தப்படும் அசுட்டட்டைன் தனிமத்தை கண்டுபிடித்த்தாக இவர் அறிவித்தார் [2]. இத்தனிமத்திற்கு 1940 ஆம் ஆண்டில் எல்மெட்டியம் என்ற பெயரையும் [3], 1942 ஆம் ஆண்டில் ஆங்கிலோவெல்மெட்டியம் [4] என்ற பெயரையும் வால்டர் முன்மொழிந்தார். பிற்காலத்தில் அவர் தனிமம் அசுட்டட்டைனைக் கண்டுபிடிக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டது [2][5].
1992 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று வால்டர் இறந்தார்.
.