வால்மீகி சௌத்ரி Valmiki Choudhary | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967–1971 | |
முன்னையவர் | இராசேசுவர் படேல் |
பின்னவர் | திக்விசய் நாராயண் சிங் |
தொகுதி | ஆச்சிபூர், பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சமால்பூர், முங்கேர் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 26 சூலை 1921
இறப்பு | 28 மார்ச்சு 1996 | (அகவை 74)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிந்தா ராணி சௌத்ரி |
மூலம்: [1] |
வால்மீகி சௌத்ரி (Valmiki Choudhary) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் பீகாரில் உள்ள ஆச்சிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
வால்மீகி சௌத்ரி 1996 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதியன்று அன்று தனது 74 ஆவது வயதில் இறந்தார்.[4] சூன் மாதம் 10 ஆம் தேதியன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்[5]