வாழ்க்கைப் படகு | |
---|---|
சுவரொட்டிப் படம் | |
இயக்கம் | சி. சீனிவாசன் |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் |
கதை | வேப்பத்தூர் கிட்டு |
இசை | விசுவநாதன் இராமமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் தேவிகா ஆர். முத்துராமன் கே. பாலாஜி ஆர். எஸ். மனோகர் எம். வி. ராஜம்மா |
ஒளிப்பதிவு | பி. எல்லப்பா |
படத்தொகுப்பு | பாலகிருஷ்ணா |
கலையகம் | ஜெமினி ஸ்டுடியோஸ் |
விநியோகம் | ஜெமினி பிக்சர்சு |
வெளியீடு | 1965 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழ்க்கைப் படகு (Vaazhkai Padagu) 1965ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படத்தை சி. சீனிவாசன் இயக்கியிருந்தார்.[2] வேப்பத்தூர் கிட்டு எழுத்தில் உருவான இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஜெமினி கணேசன், தேவிகா முக்கிய வேடங்களிலும் ஆர். முத்துராமன், எஸ். வி. ரங்காராவ், கே. பாலாஜி, ஆர். வி. மனோகர், எம். வி. ராஜம்மா இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[3] இப்படமானது 1964ஆவது ஆண்டில் வெளியானசிந்தகி இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2][4]
வாழ்க்கைப் படகு | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1965 |
ஒலிப்பதிவு | 1965 |
இசைப் பாணி | ச ரி க ம[5] |
நீளம் | 25:04 |
மொழி | தமிழ் |
விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[6]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம்(நி:நொ) |
---|---|---|---|---|
1 | ஆயிரம் பெண்மை மலரட்டுமே | பி. சுசீலா | கண்ணதாசன் | 05:24 |
2 | நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ | பி. பி. சீனிவாஸ், பி. சுசீலா | 03:56 | |
3 | உன்னைத் தானே நான் அறிவேன் | பி. சுசீலா | 03:43 | |
4 | சின்னச் சின்னக் கண்ணனுக்கு | பி. பி. சீனிவாஸ் | 03:34 | |
5 | பழனி சந்தன வாடை | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி | 03:08 | |
6 | தங்க மகன் | பி. சுசீலா | 03:17 | |
7 | கண்களே கண்களே | பி. சுசீலா | 03:22 |