வி. அனுசுயா பாய் | |
---|---|
பிறப்பு | 23 ஆகத்து 1953 சென்னை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | தட கள விளையாட்டு வீரர் |
அறியப்படுவது | அருச்சுனா விருது |
வி. அனுசுயா பாய் (V. Anusuya Bai) (பிறப்பு 23 ஆகஸ்ட் 1953) ஒரு இந்திய முன்னாள் தட மற்றும் கள விளையாட்டு வீராங்கனை ஆவார். அவர் 1975 இல் அர்ஜுனா விருதையும் 1976 இல் பாகிஸ்தானில் நடந்த சர்வதேச தடகள கூட்டத்தில் நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்றார். [1] [2] அவர் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். அவர் 1973 மாஸ்கோவில் கோடைக்கால யுனிவர்சியேட் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். விரைவோட்ட நிகழ்வுகள் மற்றும் வட்டெறிதல் போட்டிகளில் அவர் பங்கு பெற்றார். [3] அவர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னையின் தெற்கு இரயில்வேயின் துணைத் தலைமை பணியாளர் நலன் அலுவலராக ஓய்வு பெற்றார்.
1977 ஆம் ஆண்டில் மேற்கு ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் நடந்த முதல் உலக தடகள வெற்றியாளர் போட்டியில் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதாக இந்து தவறாக அறிவித்தது. [4] அந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வு 1977 ஐ.ஏ.ஏ.எஃப் உலகக் கோப்பை மற்றும் பாயின் பெயர் முடிவுகளில் இடம்பெறவில்லை. [5]
இந்தியாவில் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான் அர்ஜுனா விருதை தமிழ்நாட்டிலிருந்து பெற்று வந்த முதல் பெண்மணி இவர் ஆவார். [6]