விஷ்ணாம்பேட்டை ராமச்சந்திர தீட்சிதர் | |
---|---|
![]() | |
பிறப்பு | விஷ்ணாம்பேட்டை, மதராசு மாகாணம் | ஏப்ரல் 16, 1896
இறப்பு | நவம்பர் 24, 1953 சென்னை, இந்தியா | (அகவை 57)
பணி | வரலாற்றாய்வாளர், பேராசிரியர் |
ராமச்சந்திர தீட்சிதர் (Vishnampet R. Ramachandra Dikshitar) (ஏப்ரல் 16, 1896 - நவம்பர் 24, 1953) தமிழ்நாட்டில் பிறந்த இந்தியவியலாளரும் திராவிடவியலாளரும் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் பிரிவுகளுக்கு பேராசிரியராக இருந்தார்.
இவர் மதராசு மாகாணத்தின் விஷ்ணாம்பேட்டையில் பிராமணத் தம்பதிகளுக்குப் பிறந்தார். [1] திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவசாமி ஐயர் பள்ளியிலும் இளநிலை வரலாறு பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியின் புனித யோசேப்பு கல்லூரியிலும் பயின்றார். மேல்நிலைப் பட்டத்தையும் பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
இவர் புனித யோசேப்பு கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1928 ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் துறைகளுக்குப் பேராசிரியரானார். இவர் இந்திய வரலாற்றினை, குறிப்பாக தமிழ் வரலாற்றினை நன்கு அறிந்திருந்தார். சமற்கிருதத்தைக் கற்றுத் தேர்ந்தார்.