வி. ஏ. கே. ரங்கா ராவ் | |
---|---|
பிறப்பு | 1938 சென்னை |
தேசியம் | இந்தியா |
பணி | அறிஞர், நடனக் கலைஞர், திரைப்பட வரலாற்றாசிரியர், புத்தக விமர்சகர், கலை விமர்சகர், பேச்சாளர், சேகரிப்பாளர், திரைப்படம் மற்றும் இசை விமர்சகர் |
அறியப்படுவது | 78 ஆர்பிஎம் இசைத் தட்டுகளின் மிகப் பெரிய சேகரிப்பு கொண்டவராக அறியப்படுகிறார். |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆலாபனா, மரோ ஆலோபனா |
பெற்றோர் | ராவு ஜனார்த்தன கிருஷ்ண ரங்க ராவ் மற்றும் சரசுவதி தேவி |
ராவு வெங்கட ஆனந்தகுமார கிருஷ்ண ரங்கா ராவ், ( Ravu Venkata Anandakumara Krishna Ranga Rao ) சுருக்கமாக வி. ஏ. கே. ரங்கா ராவ் என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய இசை அறிஞரும், நடனக் கலைஞரும், திரைப்பட வரலாற்றாசிரியரும், புத்தக விமர்சகரும், கலை விமர்சகரும் மற்றும் பேச்சாளரும் ஆவார். இவர் இந்தியாவின் விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள பொப்பிலியின் அரச குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். இவர் பொபிலி அரசர் மற்றும் பொப்பிலி ராணியின் தங்கையான சரசுவதி தேவியின் இளைய சகோதரரான ராவு ஜனார்த்தன கிருஷ்ண ரங்க ராவ் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தை சிக்கவரம் ஜமீந்தாராக இருந்தார்.
50க்கும் மேற்பட்ட இந்திய பாடகர்களின் முதல் பதிவுகளை இவர் வைத்திருக்கிறார். அவர்களில் கண்டசாலா, ஹேமந்தா முகர்ஜி, ம. ச. சுப்புலட்சுமி மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோர் அடங்குவர். இவரது சேகரிப்பில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளின் இசைத் தொகுப்பும் உள்ளது. அவற்றில் சில இலத்தீன், கிரேக்கம் மற்றும் உருசிய மொழி மற்றும் துளுவம் மற்றும் தோடா உட்பட 40 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளும் உள்ளன. இவரது தொகுப்பில் இரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைசிறந்த ஆளுமைகளின் நாடகங்கள், உரைகள் மற்றும் பாராயணங்களும் அடங்கும்.
உலகிலேயே 78 ஆர்பிஎம் இசைத் தட்டுகளின் மிகப் பெரிய சேகரிப்பு கொண்டவராக அறியப்படுகிறார். [1] லிம்கா சாதனைகள் புத்தகம் இவரது பதிவுகளின் எண்ணிக்கையை 53,000 என்று கூறுகிறது. [2]
{{cite web}}
: Missing or empty |title=
(help)