வி. சரோஜா என்பவர் ஒரு மருத்துவர் மற்றும் தமிழக அரசியல்வாதியாவார்.
இவர் மருத்துவத்தில் எம்.டி. டி.ஜி.ஓ. படித்தவர். பின் 1976முதல் அரசு மருத்துவராக பணியாற்றி பின் 1988 முதல் 1991 வரை மகப்பேறு மருத்துவராக சவுதி அரேபியாவில் பணியாற்றியவர்.
1989 முதல் அதிமுக உறுப்பினராக இருந்துவருகிறார். 1991 - 1996 காலகட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினராகவும், 1998, 1999 - 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும்[1][2], 2004 - 2006 காலகட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியத்தலைவராகவும், 2012 - 2013 காலகட்டத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையராகவும் பதவி வகித்தார்.[3] அதிமுகவில் சேலம் மாவட்ட மகளிரணி இணைச்செயலாலாளர் போன்ற பதவிகளை வகித்தவர். 2016 ஆண்டைய சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அ.தி.மு,க. அரசில் சமூக நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5]
{{cite web}}
: External link in |title=
(help)