| |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | வரதராஜு சுந்தரமூர்த்தி | ||
பிறந்த நாள் | 6 அக்டோபர் 1965 | ||
பிறந்த இடம் | சிங்கப்பூர் | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்களவீரர்/அடிப்பாளர் (Striker) | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணி, (தலைமைப் பயிற்சியாளர்) | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1983–1987 | சிங்கப்பூர் FA | ||
1988–1989 | எஃப்சி பசெல் (FC Base) | 5 | (3) |
1989–1990 | கெடா எஃப் ஏ (Kedah FA) | ||
1991–1992 | பஹாங் எஃப் ஏ (Pahang FA) | ||
1992–1993 | சிங்கப்பூர் எஃப் ஏ (Singapore FA) | ||
1994 | கெலாண்டன் எஃப் ஏ (Kelantan FA) | ||
1995–1997 | உட்லாண்ட்சு வெலிங்டன் | ||
1998–1999 | ஜுராங் எஃப் ஏ (Jurong FC) | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
1983–1995 | சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணி | ||
மேலாளர் வாழ்வழி | |||
1999–2003 | ஜுராங் எஃப்சி (விளையாடுபவர்-பயிற்சியாளர்) | ||
2004–2007 | சிங்கப்பூர் தேசிய காற்பந்து அகாதமி (18 வயதுக்குட்பட்டோர்)-NFA U-18]][1] | ||
2007–2010 | யங் லயன்சு (சிங்கப்பூர் காற்பந்து அணி) | ||
2012–2013 | லயன்சு XII | ||
2013 | சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணி (இடைக்காலப் பயிற்சியாளர்) | ||
2014 | நெகரி செம்பிலான் எஃப் ஏ (Negeri Sembilan FA) | ||
2014–2016 | டாம்பைன்சு ரோவர்சு | ||
2016– | சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணி | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
வி.சுந்தரமூர்த்தி (V. Sundramoorthy) 1980களிலும் 1990களிலும் சிங்கப்பூரின் தேசிய காற்பந்து விளையாட்டாளராகத் திகழ்ந்தவர். இவர் சிங்கப்பூரின் ஆகத் திறமையான மற்றும் தேர்ச்சிமிக்க காற்பந்து விளையாட்டாளராக இருந்தார். தற்போது அவர் சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழுவின் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார்.
அவர் மலேசிய பிரிமியர் லீக்கில் விளையாடும் லயன்ஸ் XII என்ற சிங்கப்பூர் சார்ந்த அணிக்குப் பயிற்றுவிப்பாளராக இருந்தார். அதோடு அவர் 2011லிருந்து 2013 வரை 23 வயதிற்கு கீழ்பட்ட அணிக்குத் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பு வகித்தார்[2]. பிறகு அவர் மலேசிய பிரிமியர் லீக்கின் அணியான நெகிரி செம்பிலான் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கையெழுத்திட்டார்[3]. 2014 இல் அரை ஆண்டிற்கு இந்த அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பு வகித்த பிறகு அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பி டெம்பனீஸ் ரோவர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்று அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் தேசிய அணியின் பொறுப்பை ஏற்றார்.
சுந்தரமூர்த்தி தமது 18ஆவது வயதிலேயே சிங்கப்பூர் மலேசிய கோப்பை காற்பந்து போட்டியில் நுழைந்து அந்தப் போட்டியில் அதிக கோல்களை அடித்து முதன்மை நிலையில் இருந்தார். அவர் சுவிட்ஸர்லாந்திற்குச் சென்று அங்கு உள்ள எஃப் சி பேசல் என்ற அணிக்கு ஆடினார். 1988-89ஆம் ஆண்டில் இந்த அணியில் சேர்ந்து ஐந்து ஆட்டங்கள் ஆடி மூன்று கோல்களை அடித்தார்[4]. அதன்பின் 1989இல் மலேசிய கோப்பைக்காக கெடா அணியில் சேர்ந்து ஆடினார். 1990இல் கெடா அணியில் சேர்ந்து மலேசிய கோப்பைப் போட்டியில் விளையாடியபோது சிங்கப்பூரை 3க்கு 1 என்ற நிலையில் தோற்கடித்தார்.
பந்தை மிதிவண்டி போல் உதைப்பதே சுந்தரமூர்த்தியின் பந்துதைக்கும் பாங்காக இருந்தது. தேசிய விளையாட்டரங்கில் 1993இல் புரூனெய்க்கு எதிராக சிங்கப்பூர் விளையாடிய ஆட்டத்தில் இத்தகைய முறையில் விளையாடிப் புகழ்பெற்றார். சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழுவில் சேர்ந்து பல விளையாட்டுக்களை விளையாடியுள்ளார். எஸ் லீக் தொடங்கியபோது சுந்தரமூர்த்தி உட்லண்ட்ஸ் வெல்லிங்டன் காற்பந்து குழுவில் இருந்தார். பின்னர் அவர் எஸ் லீக்கின் ஜூராங் காற்பந்து குழுவின் முதல் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார். ‘தி டேஸ்லர்’ என்ற பட்டப்பெயருடன் வலம் வந்த சுந்தரமூர்த்தி ஜூரோங் காற்பந்து குழுவின் ஆட்டக்காரர் மற்றும் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது ‘ராஜநாகம்’ என அழைக்கப்பட்டார். மேலும் இவரின் வாழ்க்கை வரலாறு ‘தி டேஸ்லர்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
1988இல் சுந்தரமூர்த்தி சுவிட்ஸ் நாட்டின் பேசில் காற்பந்து குழுவில் சேர்ந்தபோது சிங்கப்பூரிலிருந்து இரண்டாவது விளையாட்டாளராக விளங்கினார். ஃபாண்டி அகமது சிங்கப்பூரிலிருந்து ஐரோப்பா அணிக்கு விளையாடச் சென்ற முதல் சிங்கப்பூரர் ஆவார். அவர் குரானிங்னன் காற்பந்து குழுவில் நீண்ட காலம் விளையாடினார். ஆனால் சுந்தரமூர்த்தி ஒரு பருவத்திற்கு மட்டுமே விளையாடினார்.
2012ஆம் ஆண்டிலிருந்து லயன்ஸ் XII அணிக்குத் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்தார். அவர் லயன்ஸ் XII அணிக்குப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற முதல் பருவத்தில் மலேசிய சூப்பர் லீக் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மலேசிய கோப்பைப் போட்டியின் அரை இறுதிக்கும் தம் அணியை முன்னேற்றிச் சென்றார். சிங்கப்பூர் தேசிய காற்பந்து கழகம் இவரைத் தேசிய காற்பந்து குழுவின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமித்தது[5]. அதே வேளையில் நிரந்தர பயிற்றுவிப்பாளரையும் தேடிக் கொண்டிருந்தது. இவரது முதல் விளையாட்டு பிப்ரவரி 3 2013இல் ஜார்டனுக்கு எதிராக ஜாலான் பசார் அரங்கத்தில் நடைபெற்றது. மே 2013இல் சுந்தரமூர்த்தி 23 வயதுக்குக் கீழ்பட்ட தேசிய காற்பந்தாட்டக் குழுவிற்குத் தலைமை பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டு[6], தென்கிழக்காசிய போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பைப் பெற்றார். மே 2016இல் இவர் சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒரு வருட ஒப்பந்தத்தின் பேரில் அறிவிக்கப்பட்டார்[7].
8. http://www.fas.org.sg/news/sundram-works-towards-giving-back பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
9. http://www.goal.com/en-sg/slideshow/3717/2/title/top-5-players-in-the-canon-lion-city-cup?ICID=OP பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
10.http://www.todayonline.com/sports/football/sundram-defers-decision-until-after-malaysia-cup-campaign
11.http://www.todayonline.com/sports/football/sundram-ready-old-foes-atm
12.http://voxsports.co/lionsxii-coach-sundram-bid-farewell-captain-shahril-ishak-next
13.http://www.todayonline.com/sports/football/sundram-resigns-lionsxii-and-national-u-23-coach
15.http://www.todayonline.com/sports/football/leaving-was-difficult-correct-decision
16.http://www.tnp.sg/content/small-team-big-hopes
17.http://sg.sports.yahoo.com/blogs/fit-to-post-sports/football-become-business-sundram-000758055.html