வி. நாரஹரி ராவ் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | அரசு ஊழியர் |
அறியப்படுவது | இந்தியாவின் முதல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் |
விருதுகள் | பத்ம பூசண் |
வி. நாரஹரி ராவ் (V. Narahari Rao) ஓர் இந்திய அரசு ஊழியராவார். இவர் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பணியாற்றினார்.[1] இவர் 1948 முதல் 1954 வரை இந்தியாவின் முதல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றினார்.[2] அரசுப் பணியில் இவர் செய்த பங்களிப்பிற்காக 1954 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[3]