விகராபாத் மாவட்டம் (Vikarabad district) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விகாராபாத் நகரத்தில் உள்ளது.
ரங்காரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.[2]
விகாராபாத் மாவட்டம், சங்கர்ரெட்டி மாவட்டம், ரங்காரெட்டி மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.
விகாராபாத் மாவட்டம் 3,386 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,91,405 ஆகும்.[3] இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பெருமளவில் பேசப்படுகிறது. இம்மாவட்டம் நான்கு தெலுங்கானா சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்ட வாகனத் தகடு எண் TS–34 ஆகும்.[4]
விகராபாத் மாவட்டம் தண்டூர் மற்றும் விகாராபாத் என இரண்டு வருவாய் கோட்டங்களையும் 18 மண்டல்களையும் கொண்டுள்ளது.[1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல மாவட்ட ஆட்சித்தலைவர் டி. திவ்யா ஆவார்.[5]
விகாராபாத் மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் உள்ள 18 மண்டல்கள்:
வ எண். | தண்டூர் வருவாய் கோட்டம் | விகராபாத் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | பசீராபாத் | பந்த்துவாரம் |
2 | பொம்மரசம்பேட்டை | தாரூர் |
3 | தௌத்தாபாத் | தோமா |
4 | கொடங்கல் | குல்காசேர்லா |
5 | பெத்தமூல் | கோட்டேபள்ளி |
6 | தண்டூர் | மார்பள்ளி |
7 | யெலால் | மொமீன்பேட்டை |
8 | நவாப்பேட்டை | |
9 | புதூர் | |
10 | பர்கி | |
11 | விகராபாத் |