தோன்றிய நாடு | பாக்கித்தான், இந்தியா | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
| |||||||
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்) |
விகான் (Vikhan) என்பது பாக்கித்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கால்நடை பாதுகாவல் நாய் இனமாகும்.[1] விகான் பாக்கித்தானில், குறிப்பாக கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சித்ரால் பகுதியில் காணப்படுகிறது.[2]:{{{3}}}[3]:{{{3}}} இந்தியாவில், இது இமாச்சலப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இந்த இனத்தின் பெயர் "விக்" என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் உடைந்த, மூக்கற்ற அல்லது துறவி என்பதாகும். இது சீரற்ற நிலத்தில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இந்த இனம் பெரும்பாலும் இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளிலிருந்து தனிமையில் வாழ்வதால் இந்த பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.[2]:{{{3}}}[3]:{{{3}}}
மற்ற கால்நடை பாதுகாவல் நாய் இனங்களுடன் ஒப்பிடும் போது, விகான் எளிமையான தோற்றமுடையது. வலிமையை விட வேகத்திற்காக உடல் வாகை கொண்டுள்ளது. பெரிய இசுக்காட்லாந்து கோலியை ஒத்திருக்கிறது. இந்த இனமானது பொதுவாகக் கறுப்பு, சிவப்பு அல்லது நிறத்தில் தொங்கிய காதுகள் மற்றும் உரோமங்கள் நிறைந்த வாலுடன் காணப்படும். இதன் நீண்ட உரோமமானது அடிக்கடி கம்பளிக்காகத் துண்டிக்கப்படுகிறது.[2]:{{{3}}}[3]:{{{3}}}
இதன் வாழிட வரம்பில், சிறுத்தை உட்பட வேட்டையாடுபவர்களிடமிருந்து செம்மறி மந்தைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இனத்தின் கழுத்தை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, தடிமனான இரும்பு பட்டை கழுத்தில் பொருத்தப்படுகிறது.[2]:{{{3}}}[3]:{{{3}}}