விகாரமாகாதேவி | |
---|---|
விகாரமாகாதேவி சிலை | |
Tenure | 205 கி.மு - 161 கி.மு |
துணைவர் | காகவண்ண தீசன் |
தந்தை | களணி தீசன் |
விகாரமாகாதேவி என்பவள் துட்டகைமுனு (கி.மு. 161 முதல் கி.மு. 137 வரை) என்ற இலங்கை மன்னனின் தாயாவாள். காகவண்ண தீசன் (கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை) என்ற உருகுணை இராச்சிய மன்னனுக்கும் விகார மாதேவிக்கும் பிறந்தவனே துட்டகைமுனு. துட்டகைமுனு காகவன்ன திச்சனிடம் வடஇலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் என்பவன் மீது போர் தொடுக்க வற்புறுத்தினான். எல்லாளன் மீதுள்ள மக்கள் பலம் மற்றும் படை பலம் கருதி காகவன்ன திச்சன் எல்லாளன் மீது போர் தொடுக்க அச்சமுற்றான். இதை ஏளனப்படுத்தி பெண்களின் அணிகலன்களை தந்தைக்கு பரிசாக அனுப்பி வைத்தான் துட்டகை முனு. இந்த வருத்தத்தால் காகவண்ண திச்சன் இறந்தான். துட்டகைமுனுவிற்கு அவனது தந்தை எல்லாளன் (வட இலங்கை) மீது படை எடுக்க உதவாவிட்டாலும் அவளுடைய தாயான விகார மாதேவி உதவினாள்.
துட்டகைமுனு எல்லாளன் மீது போர் தொடுக்கையில் இரு தளபதிகளின் கோட்டைகளை அவனால் வெல்ல இயலவில்லை. மகேலனின் கோட்டையும், தித்தம்பன் என்பவனின் கீழ் இருந்த அம்பதித்தை கோட்டையும் நேரில் போர் செய்து வெல்ல இயலாதவை என்று கண்ட துட்டகைமுனு தன் தாயான விகார மாதேவியை மணந்து தருவதாக ஆசைக்காட்டியும்[1][2], அவளது உடலழகைக் காட்டியும்[3] தன் பக்கம் ஈர்த்தான். விகார மாதேவியை மணந்து கொள்வதால் அரசாட்சி கிடைக்கும் என கனவு கண்ட தளபதிகள் ஒழுங்கே போர் செய்யாததால் இரு கோட்டைகளும் விழுந்தன. இவ்வாறு துட்டகைமுனுவின் வெற்றி எளிதாக விகார மாதேவி இரண்டு முறை உதவியது குறிப்பிடத்தக்கது.