பேகம் விகார் உன் நிசா (Begum Viqar un Nisa) ( விக்டோரியா ரேகா அல்லது ' லேடி நூன்' என்றும் அழைக்கப்படுகிறார்; ) (பிறப்பு:1920 - இறப்பு 2000 சனவரி 16) இவர் 1957 முதல் 1958 வரை பாக்கித்தானின் முதல் பெண்மணியாக இருந்தார். தொழிலால், இவர் ஒரு சமூக சேவகர். இவர் 1945இல் 7 வது பாக்கித்தான் பிரதமர் சர் பெரோஸ் கான் என்பவரை இவர் மணந்தார். மேலும் பாக்கித்தான் இயக்கத்திலும் பங்கேற்றார். விகார் பிறப்பு மற்றும் தோற்றம் மூலம் ஒரு ஆஸ்திரியராக இருந்தார். 1920 சூலையில் விக்டோரி என்றப் பெயரில் பிறந்தார். [1] [2] [3]
திருமணத்திற்குப் பிறகு இவர் இசுலாமிற்கு மாறினார். மேலும் தனது பெயரை விக்டோரியாவிலிருந்து விகார் உன் நிசா என மாற்றிக் கொண்டார். சர் வைரோஸ் இந்திய தலைமை ஆளுநரின் அமைச்சரவையில் இருந்து விலகிய பின்னர் லாகூருக்குச் சென்ற அதே ஆண்டில் நூன் தில்லியை விட்டு வெளியேறினார். [2] நூன் பாக்கித்தான் அரசியலில் நேரடியாக தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். மேலும் உள்ளூர் அரசியலுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பஞ்சாப் மாகாண மகளிர் துணைக்குழுவில் உறுப்பினரானார். முஸ்லிம் லீக்கிற்கான பேரணிகளையும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்தார். பஞ்சாபில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போது, நூன் பிரித்தன் ஆதரவுடைய கிசாரின் அமைச்சரவைக்கு எதிராக மூன்று முறை கைது செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உதவினார்.
1947இல் பாக்கித்தானுக்கு சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து, எல்லையைத் தாண்டி மக்கள் பெருமளவில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அகதிகள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதிலும், பல்வேறு அகதி முகாம்கள் மற்றும் குழுக்களுக்கு உதவி வழங்குவதிலும் ஈடுபட்டார். [2] இவர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு உள்ளூர் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். பாக்கித்தானின் இராவல்பிண்டி, விகார் உன் நிசா மகளிர் கல்லூரி மற்றும் வங்காளாதேசத்தின் தலைநகர் டாக்காவில் பெண்களுக்கான புகழ்பெற்ற பள்ளியான விகருன்னிசா நூன் பள்ளி ஆகியவற்றை நிறுவ இவர் உதவினார்.
இவரது கணவர் சர் பெரோஸ் பின்னர் கிழக்கு பாக்கித்தானின் முதல் ஆளுநராகவும், இறுதியில் 1957இல் பாக்கித்தான் பிரதமராகவும் ஆனார் . அவரது மரணத்திற்குப் பிறகு, பாக்கித்தானின் பிற முக்கிய பெண் சமூக சேவையாளர்களான மறைந்த பேகம் மஹ்மூதா சலீம் கான், அட்டியா இனாயதுல்லா மற்றும் பேகம் ஸாரி சர்பராஸ் ஆகியோருடன் இவர் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டார்; [4] மற்றும் பாக்கித்தானின் குடும்பக் கட்டுப்பாடு சங்கம், பாக்கித்தானியர்களுக்கு அவசர மருத்துவ மற்றும் நிவாரண சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பான பாக்கித்தான் ரெட் கிரசண்ட் அமைப்பு, பாக்கித்தானின் தேசிய கைவினை அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் மூத்த மற்றும் நிர்வாக உறுப்பினராக இருந்தார். முகம்மது ஜியா-உல்-ஹக்கின் ஆட்சியின் போது, சிறிது காலம், இவர் பாக்கித்தான் அரசாங்கத்தில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை மத்திய அமைச்சராக இருந்தார். தனது பிற்கால வாழ்க்கையில், பாக்கித்தானின் அபோட்டாபாத்திற்கு அருகிலுள்ள மலைகளிலும், அழகிய இஸ்லாமாபாத்திலும் உள்ள தனது குடிசையான "அல்-ஃபெரோஸ்" மற்றும் வண்ணமயமான இஸ்லாமாபாத்தில் தனது நேரத்தை அதிக நேரம் செலவிட்டார்.
விகார்-உன்-நிசா நூன் 2000 சனவரி 16 அன்று இஸ்லாமாபாத்தில் ஒரு நீண்டகால நோயால் இறந்தார். [2]