விக்கிபீடியாவின் அறிவியல் தகவல்கள்(Science information on Wikipedia)அறிவியலைப் பற்றி விக்கிபீடியா முன்வைக்கும் தகவல்களை உள்ளடக்கியதாகும். இந்த தகவல்களின் தாக்கம் மற்றும் தரம் தொடர்பான விமர்சனங்களும் விவாதங்களும் இல்லாமலில்லை. விக்கிபீடியா பயனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தகவலுடன் பொது ஈடுபாடு கொண்டுள்ள பயனாளிகள் ஆகியோருக்கிடையே இடைவினை உரையாடல்கள் நிகழ்கின்றன.
கட்டற்ற சுதந்திரம் கொண்ட அறிவியல் வெளியீடுகளின் விநியோகம் மற்றும் தாக்கத்தை விக்கிப்பீடியா அதிகரித்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கண்டறிந்துள்ளது.[1] மிகவும் பிரபலமான ஒரு பொது தகவல் ஆதாரமாக மாறி வளர்ந்திருக்கும் விக்கிபீடியாவின் புகழ், அறிவியலைப் பற்றி பேசுபவர்கள் மற்றும் எழுதுபவர்களை பாதித்துள்ளது என்பதற்கான சான்றுகள் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கண்டறிந்துள்ளது.[2][3]தேடுபொறிகளில் தேடப்படும் தரநிலையில் விக்கிப்பீடியா உயர் தரத்தில் இருப்பதால் 2017 ஆம் ஆண்டு விக்கிபீடியாவை அறிவியல் தகவல்களின் பிரபலமான ஆதாரமாக யுனெசுகோ தெரிவித்துள்ளது. .[4] விக்கிப்பீடியா புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை எவ்விதமாக ஒருங்கிணைக்கிறது என்பதை அறிய 2018 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[5]
2016 ஆம் ஆண்டு விக்கி கல்வி அறக்கட்டளையும் சைமன் அறக்கட்டளையும் இணைந்து "அறிவியல் ஆண்டு" என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை வழங்கின. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக விக்கிபீடியா கல்வியாளர்கள் கல்வி மாநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். விஞ்ஞானிகளை அவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ள துறையிலிருந்து படைப்புகளை விக்கிபீடியாவிற்கு பங்களிக்க முன்வருமாறு அழைத்தனர்.[6] கற்றல் அனுபவத்தின் ஒரு பகுதியாக விக்கிபீடியாவின் அறிவியல் கட்டுரைகளைத் திருத்த மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை சில பல்கலைக்கழகங்கள் முன்னெடுத்தன.[7] விக்கிபீடியா கட்டுரைகளைத் திருத்த முன்வருமாறு கல்வியாளர்களையும் விக்கிபீடியா சமூகம் அழைக்கிறது. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு கல்விச் சங்கங்கள் விக்கிபீடியா கட்டுரைகளைத் திருத்த தங்கள் உறுப்பினர்களை ஊக்குவித்துள்ளன.[8][9]
விக்கிபீடியா அனைத்து துறைகளின் அறிவியல் வெளியீடுகளையும் மேற்கோள் காட்டும் ஒரு பரந்த மற்றும் மாறுபட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது.[10] நேச்சர் இதழில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அறிவியல் தலைப்புகள் குறித்த 40 விக்கிபீடியா கட்டுரைகளை அவற்றின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவுடன் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு கலைக்களஞ்சியத்திலும் நான்கு "கடுமையான பிழைகள்" இருக்கின்றன என்று துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். விக்கிபீடியாவில் 162 குறைவான சிக்கல்களும் பிரிட்டானிக்காவில் 123 சிக்கல்களும் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.[11] 2017 ஆம் ஆண்டு ஒரு பிரபல அறிவியல் எழுத்தாளர் விக்கிபீடியாவின் அறிவியல் கட்டுரைகள் மிகவும் தொழில்நுட்பமானவையாக உள்ளன என்று புகார் கூறினார்.[12] விஞ்ஞானம் தொடர்பான விக்கிபீடியாவின் கட்டுரைகள் விஞ்ஞானம் தொடர்பான அரசியல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்று பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.[13][14][15]
↑Teplitskiy, Misha; Lu, Grace; Duede, Eamon (September 2017). "Amplifying the impact of open access: Wikipedia and the diffusion of science". Journal of the Association for Information Science and Technology68 (9): 2116–2127. doi:10.1002/asi.23687.
↑Benjakob, Omer; Aviram, Rona (17 April 2018). "A Clockwork Wikipedia: From a Broad Perspective to a Case Study". Journal of Biological Rhythms33 (3): 233–244. doi:10.1177/0748730418768120. பப்மெட்:29665713.