விக்ரம் | |
---|---|
இயக்கம் | இராஜசேகர் |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | சுஜாதா |
திரைக்கதை | கமல்ஹாசன், சுஜாதா |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன், சத்யராஜ், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிஸ்சி, சாருஹாசன் |
ஒளிப்பதிவு | வி. ரங்கா, எஸ்.எம்.அன்வர் |
படத்தொகுப்பு | ஆர்.விட்டல், சி.லான்சேி |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 29 மே 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விக்ரம் (Vikram) 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராஜசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். குமுதம் வார இதழில் தொடர்கதையாக வந்து அதன் பின்னர் படமாக்கப்பட்டது.
கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை ஆலோசனையின் போதும், திரைப்படத்தின் முன் தயாரிப்பின் போதும் இத்திரைப்படத்தை இயக்குவதற்கு மணிரத்னத்தையே தன் முதல் தேர்வாக வைத்திருந்ததாக பல தருணங்களில் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில், திரையுலகில், மணிரத்னம் பெரிய பொருட்செலவில் தயாராகும் வணிகரீரியான படங்களில் பரிசோதிக்கப்படாத இயக்குநராக இருந்ததால் அது கைகூடவில்லை எனவும் தெரிவித்திருந்தார். தமிழ்த் திரைப்பட உலகில் 1 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான முதல் திரைப்படம் விக்ரமாகத் தான் இருந்தது.[1][2]
கமல்ஹாசன் இத்திரைப்படத்தைப் பற்றி பின்னாளில் கூறும் போது அந்நாளைய ஊடகங்களால் விக்ரம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் என்றே கூறியுள்ளார்.[3]
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்வரிகளை வாலியும் வைரமுத்துவும் எழுதியிருந்தனர்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | விக்ரம்.. விக்ரம் ... | கமல்ஹாசன் | வைரமுத்து | 4:49 |
2 | வனிதாமணி ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, கமல்ஹாசன் | வைரமுத்து | 4:54 |
3 | சிப்பிக்குள் ஒரு முத்து ... | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | வைரமுத்து | 4:42 |
4 | ஏஞ்ஜோடி மஞ்சகுருவி ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, சித்ரா | வாலி | 4:48 |
5 | மீண்டும் மீண்டும் வா ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | 5:06 |
வெளி ஒலியூடகங்கள் | |
---|---|
யூடியூபில் ¬ விக்ரம் திரைப்படத்தின் பாடல் தொகுப்பு |