விசிறித்தொண்டை ஓணான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | இகானியா
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | திராகோனினே
|
பேரினம்: | |
இனம்: | சீ. பாண்டிசெரானா
|
இருசொற் பெயரீடு | |
சீதானா பாண்டிசெரானா குவியெர், 1829 | |
![]() |
விசிறித்தொண்டை ஓணான் (Fan throated lizard) என்பது பல்லியோந்தி இனத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் என அழைக்கப்படுகின்றன. விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் நேபாளத்திலும், இரண்டு வகைகள் இலங்கையின் கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை நடு இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் சின்ன வக்கா என்று உள்ளூரில் அழைக்கும் விசிறித்தொண்டை ஒணான்கள் காணப்படுகின்றன. அண்மையில் இவற்றை ஆய்வுசெய்து தனி இனமாக நிறுவி சித்தானா மருதம்நெய்தல் என்ற அறிவியற்பெயர் இட்டுள்ளனர்.[2] இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும். [3]