தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | விஜய குமார் யோமகேஷ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 21 திசம்பர் 1987 சென்னை, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | யோமி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை விரைவு வீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | டெல்லி கேபிடல்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2012 | சென்னை சூப்பர் கிங்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | நார்தன் வாரியர்ஸ்-அபு தாபி இருபது20 ஓவர் போட்டிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 20 டிசம்பர் 2020 |
விஜய குமார் யோமகேஷ் (Vijaykumar Yo Mahesh) (பிறப்பு: டிசம்பர் 21, 1987), தமிழ்நாடு அணிக்காக விளையாடிய முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 21 டிசம்பர் 1987ம் ஆண்டு பிறந்தவர். வலது மட்டைப் பந்து ஆட்டக்காரர் மற்றும் வலது கை பந்து வீசும் திறன் படைத்தவர். சென்னையில் உள்ள செயின்ட் பேட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
இவர் செப்டம்பர் 2005 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒரு நாள் அணியில் நுழைந்தார். மேலும், இலங்கையில் நடந்த ஆப்ரோ-ஆசிய கோப்பை மற்றும் 2006 க்கு உட்பட்ட 19 வயதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பை இரண்டிலும் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள போதுமான அளவு விளையாடினார்.[2]
19 வயதிற்குட்பட்டோருக்கான பத்து போட்டிகளில் இவர் 15 ஆட்டக்காரர்களை வீழ்த்தினார். சராசரியாக 32 பந்துகளில் ஒரு ஆட்டக்காரரை வீழ்த்தினார். மட்டை பந்து அடிப்பதில் இவர் திறன் குறைவாக பெற்றிருந்ததால், பதினோராவது ஆட்டக்காரராக மைதானத்தில் இறக்கப்படுவார். 2008 முதல் 2010 வரையான ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.[3] பின்னர் 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், 2012 இந்தியன் பிரீமியர் லீக்கின் முடிவில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் உள்நாட்டு 50 ஓவர் போட்டியான 2009-10 விஜய் ஹசாரே டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வலது-இடது என இரு திசைகளிலும் பந்தை சுழற்றும் திறன் பெற்றவர்.
20 டிசம்பர் 2020 அன்று, மகேஷ் அனைத்து வகையான துடுப்பாட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [4]