விஜயநாராயணர் கோயில் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சாமராசநகர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
விஜயநாராயண கோயில் (Vijayanarayana Temple) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டத்தின் குண்டுலுபேட்டை நகரில் அமைந்துள்ளது. இந்த கோயில் 10ஆம் நூற்றாண்டின் ஆட்சி செய்த மேலை கங்கர்களின் ஆட்சிக்கு முந்தையது. இருப்பினும் இது 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர காலம் வரை பிற்கால அரசுகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுள்ளது. இந்துக் கடவுளான நாராயணனின் (அல்லது விஷ்ணு ) பதிப்பான விஜயநாராயணன் தெய்வத்தை இங்கு அமைப்பதற்கு போசள மன்னர் விட்டுணுவர்தனன் பொறுப்பேற்றார் எனத் தெரிகிறது. [1]
கோவிலிலுள்ள கர்ப்பக்கிருகம் அதன் எதிரே அமைந்துள்ள பக்தர்கள் வணங்குமிடத்துடனும், மண்டபத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. [1] கோயிலின் நுழைவாயிலில் யாளி தூண்கள் வரிசையாக உள்ளன. அவை வீரர்கள் சிங்கங்களின் மேல் சவாரி செய்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் திருமால், கருடன், அனுமன் உள்ளிட்ட தெவங்களுக்கான ஏராளமான சிற்பங்களும் உள்ளன.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)