விஜய் பட்கர் (Vijay P. Bhatkar) என்பவர் இந்திய கணினி அறிவியலாளர், தகவல் தொழில்நுட்ப தலைவர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் பரம் மீத்திறன் கணினிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.[2] பட்கர் மகாராட்டிரா பூசண்,[3]பத்ம சிறீ,[4]பத்ம பூசண்[5] விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய கணினி பத்திரிகை டேட்டா கிவிஸ்ட் இவரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை வடிவமைத்த நட்சத்திர முன்னோடி எனப் பெருமைப்படுத்தியுள்ளது. இவர் சி-டாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். தற்போது இந்தியாவிற்கான வளரும் மீத்திறக் கணினித் திட்டத்தில் பணிபுரிகிறார்.[6][7]
2017ஆம் ஆண்டு சனவரி முதல் இந்தியாவின் நலாந்தா பல்கலைக் கழகத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் தில்லி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிர்வாக வாரியத்தின் தலைவராக 2012 முதல் 2017 வரை பணியாற்றினார்.
1965ஆம் ஆண்டில் விஸ்வேஸ்வரயா தேசிய தொழில்நுட்ப நிறுவனம் என்ற பொறியியல் கல்லூரியில் இளங்நிலை பொறியியல் பட்டம் பெற்றார். 1968ஆம் ஆண்டில் மஹாராஜா சயாஜிராவோ பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் பட்டம் பெற்றார். 1972ஆம் ஆண்டில் தில்லியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திலிருந்து பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[8] 2011ஆம் ஆண்டில் பாட்டீல் பல்கலைக் கழகத்திலிருந்து கெளரவ முனைவர் பட்டம் பெற்றார்.[9] 2014ஆம் ஆண்டில், குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்தும் கெளரவ முனைவர் பட்டம், பெற்றார்.[10]
பட்கர் 1991ஆம் ஆண்டில் முதல் இந்திய மீத்திறன் கணினி, பரம் 8000, பின்னர் 1998-இல் பரம் 10000 ஆகியவற்றை உருவாக்கினார்.
சனவரி 2017-இல், டாக்டர் பாட்கர் நலாந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.[11][12] இதற்கு முன்னர் தில்லி-இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.[13] இந்தியாவில் 6,000க்கும் அதிகமான அறிவியலாளர்களின் விஞ்ஞான பாரதி அமைப்பின், தேசிய அறிவியல் தலைவராக உள்ளார். பாட்கர் 12 புத்தகங்கள் மற்றும் 80 தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆவணங்களை எழுதியுள்ளார். பல பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாவில், பன்னாட்டு மற்றும் தேசிய மாநாடுகளில் உரையாற்றியுள்ளார்.[14]
↑"Padma Awards"(PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original(PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
↑"Padma Awards"(PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original(PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"Architect of India’s first supercomputer 'Param' to head Nalanda University". DNA. 28 January 2017. Retrieved 3 July 2017.
"NVIDIA, IIT collaborate to develop supercomputer". Rediff.com. December 22, 2012. Retrieved 3 July 2017.