விஜய் பிரகாஷ் | |
---|---|
பிறப்பு | 21 பெப்ரவரி 1976 மைசூர், மைசூரு மாவட்டம், கர்நாடகம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பொறியியல் கல்லூரி, மைசூர், கர்நாடகம், இந்தியா |
பணி | பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது வரை |
விஜய் பிரகாஷ் (Vijay Prakash, பிறப்பு: 21 பெப்ரவரி 1976) என்பவர் ஒரு கர்நாடகத்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டிற்கான கர்நாடக அரசின் 'சிறந்த பின்னணிப் பாடகர்' விருதை பியூட்டிபுல் மனசுகலு திரைப்படத்தின் "நம்மூரல்லி சலிகலடல்லி" என்ற பாடலுக்காக வென்றார்.[1] அத்துடன் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது பெற்ற ஜெய் ஹோ பாடலின் பாடகர்களில் இவரும் ஒருவர்.[2] ஜீ தமிழ் மற்றும் ஜீ கன்னடம் என்ற தொலைக்காட்சியின் கன்னடம் மற்றும் தமிழ் மொழி உண்மைநிலை நிகழ்ச்சியான சரிகமபவின் நடுவர்களில் ஒருவர் ஆவார்.
இவர் 21 பெப்ரவரி 1976 ஆம் ஆண்டில் இந்தியாவில் மைசூரில்மைசூரில் கர்நாடக கலைஞர்களான லோபாமுத்ரா மற்றும் மறைந்த எல். ராமசேஷா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், மேலும் இவர் சிறுவயது முதல் கருநாடக இசையில் பயிற்சி பெற்றுள்ளார்.
விஜய் பிரகாஷ் 2001 இல் மஹதி பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு காவ்யா பிரகாஷ் என்ற மகள் உண்டு.
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)