விஜி சுப்பிரமணியம்

விஜி சுப்பிரமணியம்
பிற பெயர்கள்விஜி சங்கர்
பிறப்பு1952
சென்னை, இந்தியா
இறப்புபிப்ரவரி 9, 1995 (aged 42)
லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்கா
இசை வடிவங்கள்உலக இசை, இந்திய பாரம்பரிய இசை, திரை இசை
தொழில்(கள்)பாடகர், இசை அமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, தம்புரா
இணைந்த செயற்பாடுகள்லட்சுமி சங்கர், எல். சுப்பிரமணியம்

விஜி சுப்பிரமணியம் (Viji Subramaniam), பெரும்பாலும், விஜி சங்கர் என்று அறியப்படும் இவர் குறிப்பிடத்தக்க வட இந்திய பாடகியான லட்சுமி சங்கர்[1][2][3] மற்றும் இராஜேந்திர சங்கர் ஆகியோரின் மகளாவார்.[4] இவரது தந்தை, பிரபல சித்தார் கலைஞர் ரவி சங்கரின் மூத்த சகோதரர் ஆவார். இவரது தாய் மற்றும் மாமாவைப் போலவே, விஜியும் ஒரு இசைக்கலைஞராகவும் மற்றும் இந்தியப் பாரம்பரிய முறைகளில் நன்கு பயிற்சி பெற்றவராகவும் இருந்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

தென்னிந்தியாவின், சென்னையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் விஜயசிறீ சங்கர் என்ற பெயரில் பிறந்த இவர், மும்பையில் வளர்ந்தார்.[5] இளம் வயதிலேயே ஒரு பாடகராக, தன் தாயுடன் இவர் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.[4] அடிக்கடி தம்புராவுடன் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.[4] வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பாடகியாக இவர் நிகழ்த்திய நிகழ்ச்சிகளுக்கா 1972 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் "இந்தியக் குடியரசுத் தலைவர்" பதக்கத்தை வென்றார். 1997 ஆம் ஆண்டு சங்கர் தனது சுயசரிதையான இராக மாலா வில், விஜியின் குரலானது "இனிமையான மற்றும் அழகான" குரல் என்று விவரிக்கிறார்.

இலட்சுமியுடன் சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நடத்தியதோடு மட்டுமல்லாமல், 1970களின் முற்பகுதியில் புகழ் பெற்ற தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவுடன் சங்கரின் சில சித்தார் இசை நிகழ்ச்சிகளில் தம்புரா வாசித்தார்.[6] 1974 ஆம் ஆண்டில், தனது அத்தை கமலா சக்ரவர்த்தி மற்றும் இலட்சுமி ஆகியோருடன், சங்கரின் இசை விழாவில் கலந்து கொண்டார். ஆங்கில இசைக்கலைஞர் ஜார்ஜ் ஹாரிஸன் இந் நிகழ்ச்சியை தயாரித்துள்ளார்.[7] மேலும், ரவி சங்கரின் இசை விழாவிலிருந்து இந்தியா (1976) என்ற இசைத் தொகுப்பிலும் பாடினார். மேலும் இப்பாடலை, ஹாரிசன் அவரது இங்கிலாந்தில் பதிவு செய்தார்.[8] செப்டம்பர்-அக்டோபர் 1974 இல் இசை விழாவின் ஐரோப்பிய இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து,[7] அந்த ஆண்டின் இறுதியில் ஹாரிஸனுடனான சங்கரின் வட அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களிடையே விஜி இருந்தார்.[9]

திருமணம்

[தொகு]

விஜி, கலிபோர்னியா கலை நிறுவனத்திலிருந்து இசையில் முதுகலை பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த இசை விழாவில் இருவரும் பங்கேற்றபோது, ​​தனது வருங்கால கணவர் இந்தியப் பாரம்பரிய வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியத்தை சந்தித்தார்.[5] இவர்கள் 1976 ஆம் ஆண்டு மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்.[5]

சுப்பிரமணியத்துடன் சேர்ந்து, விஜி “உலகளாவிய இசை” என்ற கருத்தை உருவாக்கினார். இது மேற்கத்திய இசையின் ஆதிக்கத்தைக் குறைத்து, ஐரிஷ், ஸ்வீடிஷ், டேனிஷ், சீன, ஆப்பிரிக்க, ஜப்பானிய மற்றும் ஈரானிய உள்ளிட்ட உலகின் பிற இசை அமைப்புகளின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திரைப்படங்கள்

[தொகு]

இந்திய இயக்குனரான மீரா நாயரின் இரண்டு புகழ்பெற்ற திரைப்படங்களுக்காக விஜி இசையமைத்துப் பாடியுள்ளார். சலாம் பாம்பே! (1988) மற்றும் சரிதா சௌத்ரி மற்றும் டென்செல் வாஷிங்டன் நடித்த மிசிசிப்பி மசாலா (1991) ஆகிய இரு படங்களும் கான் திரைப்பட விழாவின் பார்வையாளர் விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதமி விருது பெற்றது.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Making music, with love". The Hindu. 1 January 2001. http://www.hindu.com/2001/01/01/stories/09010702.htm. பார்த்த நாள்: 21 March 2013. 
  2. "Ageless artiste, timeless charm...". The Hindu. 24 March 2006 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105105347/http://www.hindu.com/fr/2006/03/24/stories/2006032402010300.htm. பார்த்த நாள்: 21 March 2013. 
  3. "Pop And Jazz Guide: Lakshmi Shankar, Shweta Jhaveri, Anuradha Pal". 2 April 2004. https://www.nytimes.com/2004/04/02/movies/pop-and-jazz-guide-036021.html?pagewanted=4&src=pm. பார்த்த நாள்: 21 March 2013. 
  4. 4.0 4.1 4.2 Kavita Das, "Lakshmi Shankar: A Life Journey That Echoes Indian Music’s Journey to the West", smithsonianapa.org, 6 November 2013 (retrieved 7 June 2014).
  5. 5.0 5.1 5.2 Barbara Hansen, "A Vegetarian Meal Spiced With Tastes of India", Los Angeles Times, 13 September 1990, p. H49 (retrieved 7 June 2014).
  6. Shankar, p. 265.
  7. 7.0 7.1 Madinger & Easter, p. 442.
  8. Lavezzoli, p. 195.
  9. Harrison, pp. 298–99.
  10. "AllMusic".
  11. Subramaniam, Viji "Partial Discography".