விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers அல்லது Viduthalai Siruthikal katchi) தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும். இது தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது பரவி காணப்படுகிறது.[சான்று தேவை] இது 1972 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கமான, அன்றைய தமிழக தலைவராக இருந்த மதுரையை சார்ந்த மலைச்சாமி அவர்களை படுகொலை செய்யப்பட்ட பிறகு, அப்போது மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமாவளவன் மதுரையில் நடந்த மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தின் முடிவில் ஒருமித்த தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சாதி ஒழிப்பு, சாம்பவர் (பறையர்) மக்கள் எழுச்சி, தமிழ் தேசியம், மக்கள் விடுதலைக்கு திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று தமிழ் வழி பெயராக மாற்றம் செய்தார்.[2][3] 2024 மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், இக்கட்சி ஐந்தாவது மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. [4]
இக்கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது.
ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பிற்கு, விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல். திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் 1990 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் நாள் ஏற்றினார்.[5]
2011 சட்டமன்ற தேர்தலில்திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்த விசிக திருமாவளவனுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும் இணைந்ததாலும், அப்போது நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதி மீதான எதிர்ப்பலையால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தனர்.