விட்டல்பாய் சாவேரி

விட்டல்பாய் சாவேரி
பிறப்பு1916
இந்தியா
இறப்பு1985
பணிஇந்திய சுதந்திர ஆர்வலர்
திரைப்படத் தயாரிப்பாளர்
புகைப்படக் கலைஞர்
எழுத்தாளர்
விருதுகள்பத்ம பூசண்

விட்டல்பாய் சாவேரி (Vithalbhai Jhaveri ;1916-1985) ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், திரைப்படத் தயாரிப்பாளரும், புகைப்படக் கலைஞரும், எழுத்தாளரும், மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார்.[1] [2] இவர், உப்புச் சத்தியாகிரகம் முதல் 1948இல் காந்தி இறக்கும் வரை, பல புகைப்படங்கள், பல இலக்கியப் படைப்புகளில் பயன்படுத்தப்பட்ட பல புகைப்படங்கள் மூலம் காந்தியை ஆவணப்படுத்தியுள்ளார்.[3] [4] பீட்டர் ரூஹே என்பவரின் "காந்தி-புகைப்பட வாழ்க்கை வரலாறு" என்ற புத்தகத்தில் இவரது புகைப்படங்களில் பலவற்றை பயன்படுத்தியுள்ளது. எட்டு தொகுப்புகளைக் கொண்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைப் பற்றிய நூலை தினாநாத் கோபால் டெண்டுல்கருடன் இணைந்து வெளியிட்டார். மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948 என்ற இவரது 330 நிமிட ஆவணப்படம், இந்தியத் தலைவரின் வாழ்க்கையை 14 அத்தியாயங்களில் உள்ளடக்கியது.[5] இந்திய அரசு இலக்கியத்துக்கும், கல்விக்குமான இவரது பங்களிப்புக்காக 1969இல் பத்ம பூசண் விருதை வழங்கியது.[6]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Royalty sought from Rajmohan". DNA India. 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
  2. "Vithalbhai Jhaveri". GandhiServe Foundation. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
  3. "Online Image Archive 1". GandhiServe Foundation. 2016. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Online Image Archive 2". GandhiServe Foundation. 2016. Archived from the original on 19 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Mahatma: Life of Gandhi, 1869-1948 on IMDb". Internet Movie Database. 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]