விண்வெளி நடவடிக்கை மசோதா (Space Activities Bill) இந்தியாவுக்கான பிரத்யேகமான விண்வெளிச் சட்டத்தை வழங்கக்கூடிய ஒரு மசோதாவாகும். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வரைவு முதன்முதலில் இசுரோவால் பொதுவெளி கருத்துக்களுக்காக பகிரங்கப்படுத்தப்பட்டது.[1][2] இந்திய விண்வெளி இலக்குகளின் பல்வேறு காரணிகள் இம்மசோதாவில் உள்ளடங்கியுள்ளன. பன்னாட்டு மற்றும் தேசிய கடமைகள், குற்றங்கள் மற்றும் அடுத்தடுத்த தண்டனைகள், தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கான தடைகள், விண்வெளியில் ஏற்படும் சேதங்களுக்கான பொறுப்பு போன்றவற்றை இம்மசோதா வரையறுக்கிறது.[3][4] விண்வெளி நடவடிக்கை மசோதா அதன் இறுதி கட்டத்தில் இருப்பதாக 2020 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 அன்று, வி இசுரோ தலைவர் கே சிவன் கூறினார்.[5] அதன்படி, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்படும். சரியான நாடாளுமன்ற நடைமுறைக்குப் பிறகு[3], விண்வெளி செயல்பாட்டுச் சட்டம் விண்வெளி விதிகளை உருவாக்குவதற்கு வழி வகுக்கும்.[6] தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் விண்வெளி ஏவுதல்களைத் தொடங்குவதற்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கும்.[7]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)