வித்தியா பாரதி (Vidya Bharati short for Vidya Bharati Akhil Bharatiya Shiksha Sansthan) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் கல்விப் பிரிவாகும். தொண்டு நிறுவனமான இது இந்தியா முழுவதும் 12,000 கல்வி நிலையங்களை இயக்குகிறது. 2016-ஆம் ஆண்டு முடிய இக்கல்வி நிலையங்களில் 3.2 மில்லியன் மாணவ-மாணவிகள் பயின்றனர்.[1][2]இதன் பதிவு அலுவலகம் லக்னோ நகரத்திலும், செயல் அலுவலகம் தில்லியிலும் இயங்குகிறது. இதன் கிளை அலுவலகம் குருச்சேத்திரத்தில் உள்ளது. [3][4]
1977-78-ஆம் ஆண்டில் தேசிய அளவில் பாலர் பள்ளிகளை மேற்பார்வையிட வித்யா பாரதி எனும் மைய அமைப்பு தில்லியில் நிறுவப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் நன்மதிப்பைப் பெற்றது.[4][5]
1992-ஆம் ஆண்டில் வித்யா பாரதியின் கீழ் 5,000 பள்ளிகள் இருந்தன. 2002-ஆம் ஆண்டில் வித்யா பாரதி அமைப்பில் 17,396 பள்ளிகளில், 93,000 ஆசிரியர்களுடன், 22 இலட்சம் மாணவ-மாணவிகள் பயின்றனர். மேலும் வித்தியா பாரதி அமைப்பு 15 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும், 7 தொழில் படிப்பு நிறுவனங்களையும் நடத்துகிறது.[6]இந்த அமைப்பு 2019-ஆம் ஆண்டில் 12,828 சாதாரண பள்ளிகளும், 11,353 முறைசாராப் பள்ளிகளையும் நடத்துகிறது. [7]2019-ஆம் ஆண்டில் வித்யா பாரதியின் பள்ளிகளில் 34 இலட்சம் மாணவர்கள் பயின்றனர். இதன் பெரும்பாலான பள்ளிகள் சிபிஎஸ்சி அல்லது அதனதன் மாநில பாடத்திட்டங்களுடன் இணைப்பு பெற்றுள்ளது.[6][8]மேலும் வித்யா பாரதி அமைப்பு 250 இடைநிலைக் கல்லூரிகளை நிர்வகிக்கிறது.
↑Bakaya, Akshay (2004). "Lessons from Kurukshetra the RSS Education Project". In Anne Vaugier-Chatterjee (ed.). Education and Democracy in India. New Delhi: Manohar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்8173046042.
↑Bharatheeya Vidyanikethan the Kerala chapter of Vidya Bharathi Akhil Bharatheeya Siksha Sansthan
"Vyasa Vidya Niketan - Our parent body". Archived from the original on 2016-04-19. பார்க்கப்பட்ட நாள் 2022-03-05.