தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 20 செப்டம்பர் 1998 கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | தடகளம் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். இவர் மூன்று முறை தேசிய போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். வித்யா 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் ஓடி 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி. டி. உசா செய்த இந்திய தேசிய சாதனையை சமன் செய்தார். இவர் அக்டோபர் 3 அன்று 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். முகம்மது அச்மல் வாரியத்தோடி, ராஜேஷ் ரமேஷ் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் வித்யா ராம்ராஜ். இவரது தந்தை ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் இவரது தாயார் மீனா ஒரு இல்லத்தரசி. [1] இவரது ஒரே மாதிரியான இரட்டையர் நித்யாவும் ஒரு தடகள வீராங்கனை ஆவார். வித்யா இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இவரது தாயார் இவர்களை ஈரோடு பெண்கள் விளையாட்டுப் பள்ளியில் சேர்த்தார்.[2] அங்கே சகோதரிகள் இருவரும் ஹாக்கி விளையாடத் தொடங்கினர். வித்யா ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2016 முதல் 2019 வரை) இளங்கலை பட்டம் பெற்றார்.
வித்யா 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார்.[3] 2017 வரை, வித்யா 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டிகளிலும் ஓடினார், ஆனால் பின்னர் 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயங்களில் கவனம் செலுத்தினார். இவளும் இவளது பயிற்சியாளரும் 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் இரண்டையும் ஓட முடிவு செய்தனர், மேலும் இவர் சில சமயம் 100 மீட்டர் போட்டிகளிலும் தொடர்கிறார். இவர் மூன்று முறை தேசிய போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். வித்யா 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் ஓடி 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி. டி. உசா செய்த இந்திய தேசிய சாதனையை சமன் செய்தார்[4] இவர் அக்டோபர் 3 அன்று 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார்.[5][6] முகம்மது அச்மல் வாரியத்தோடி, ராஜேஷ் ரமேஷ் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[5]
2023 இல் வித்யா பங்கேற்ற போட்டிகள்: [3]