விநாயக் சீதாராம் சர்வதே Vinayak Sitaram Sarwate | |
---|---|
பிறப்பு | 1884 |
இறப்பு | 1972 |
தேசியம் | இந்தியன் |
பிள்ளைகள் | சாலினி மோகே, நளினி மோகே, மாலினி அர்மால்கர், காலிந்தி சர்வதே, வாசுடேவ், விஷ்னு மற்றும் வசந்த் |
விநாயக் சீதாராம் சர்வதே (Vinayak Sitaram Sarwate) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1884-1972 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்தூரைச் சேர்ந்த மராத்தி சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். [1] [2] 1940 ஆம் ஆண்டில் இராசுட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தேசியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். காங்கிரசு கட்சியுடன்தான் கூட்டணி என்றும் இவர் தெளிவாகக் கூறினார். மத்திய பாரத் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும் விநாயக் இருந்தார்.
தனது மகள் சாலினி மோகேவுடன் இணைந்து "பால் நிகேதன் சங்கம்" என்ற சமூக சேவை மற்றும் கல்வி நிறுவனத்தை நிறுவினார்.[3]
1966 ஆம் ஆண்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால், இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது