விநாயக் பாண்டுரங் கர்மார்கர் | |
---|---|
பிறப்பு | 2 October 1891 சசவானே, அலிபாக், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 13 ஜூன் 1967 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | சிற்பி |
விநாயக் பாண்டுரங் கர்மார்க்கர் (Vinayak Pandurang Karmarkar) (1891-1967), நானாசாஹேப் கர்மார்க்கர் என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு இந்திய கலைஞர் ஆவார். தனது சிற்பங்களுக்காக பிரபலமானவர். [1] இவர் சத்ரபதி சிவாஜியின் சிலைகளுக்காகவும் மிகவும் பிரபலமானவர். [2] அலிபாக் அருகே சசவானே கிராமத்தில் உள்ள இவரது வீட்டில் கர்மார்க்கர் சிற்பக்கலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், மகாராட்டிராவில் உள்ள அலிபாக்-ரேவாஸ் சாலையில் இருந்து 18 கி.மீ தொலைவில், உள்ளது. இங்கு சுமார் 150 அழகிய செதுக்கப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவரது தந்தை ஒரு விவசாயி. மேலும், இசையில் கொஞ்சம் நாட்டம் கொண்டவர். விநாயக், விநாயகர் பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை வடிவமைப்பார். தனது வீட்டுச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், களிமண்ணால் சிறிய சிலைகளைச் செய்தல் போன்ற பணிகளை செய்து வந்தார். சிறுவயது முதலே சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை ராம் மந்திரின் சுவர்களில் குதிரையில் சத்ரபதி சிவாஜியின் ஓவியத்தை வரைந்தார். இது கிராம மக்களாலும், மாவட்ட ஆட்சியர் திரு. ஓட்டோ ரோத்ஃபீல்ட் என்பவரால் பாராட்டப்பட்டது. பின்னர் இவரை மும்பையில் உள்ள சர் ஜம்சேத்ஜி ஜீஜேபாய் கலைப் பள்ளியில் சேர்த்தார். தேர்வில் முதலிடம் பெற்று 'லார்ட் மேயோ' பதக்கம் பெற்றார். 'ஷங்க-த்வனி', 'மத்ஸ்ய-கன்யா' மற்றும் 'ஹம்ஜோலி' ஆகியன இவரது மற்ற சிற்பங்களில் மிகவும் பிரபலமானவை. இவரது நடை யதார்த்தமானது [3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)