வினய் சந்திர முத்கல் | |
---|---|
பிறப்பு | 2nd April 1918 புது தில்லி, இந்தியா |
இறப்பு | 1995 |
பணி | பாரம்பரிய இசைக்கலைஞர் பாடகர் |
அறியப்படுவது | இந்திய பாரம்பரிய இசை |
வாழ்க்கைத் துணை | பத்மா தேவி |
பிள்ளைகள் | மதுப் முத்கல் முகுல் முத்கல் சுஜாதா முத்கல் |
விருதுகள் | பத்மசிறீ |
வினய் சந்திர முத்கல் (Vinay Chandra Maudgalya) (1918 - 1995) ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும், பாடகரும், இந்துஸ்தானி இசை மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்களை மேம்படுத்துவதற்கான இசை மற்றும் நடன அகாதமியான கந்தர்வ மகாவித்யாலயாவை நிறுவனரும் ஆவார். [1] இவர் குவாலியர் கரானாவைப் பின்பற்றுபவர். [2] 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ கௌரவத்தை வழங்கியது. [3]
இவர், 2 ஏப்ரல் 1918 இல் பிறந்தார். லாகூரில் உள்ள விஷ்ணு திகம்பர் பலூசுகரின் அகாதமியில் இந்துஸ்தானி இசையில் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். பின்னர், புனேவில் விநாயகராவ் பட்வர்தனின் கீழ் பயிற்சி பெற்றார். பாரம்பரிய இசைக்காக தில்லியில் ஒரு பள்ளியை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் 1939இல் தில்லிக்கு வந்தார். [4]
கந்தர்வ மகாவித்யாலயா 1939இல் நிறுவப்பட்டது. இது ஆரம்பத்தில் புது தில்லி கன்னாட்டு பிளேசில், இப்போது மூடப்பட்ட இரீகல் திரையரங்கின் அருகில் ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. [4]ஆரம்ப ஆண்டுகளில், சில மாணவர்கள் சேர்ந்தனர். மேலும், முத்கல் தனது மிதிவண்டியில் சென்று குழந்தைகளை தனது அகாதமிக்கு அனுப்ப குடும்பங்களை வற்புறுத்தினார். [5]
இவருக்கு 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது. [6] இவர் பத்மா தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதுப் முத்கல், முகுல் முத்கல் என இரண்டு மகன்களும், மாதவி முத்கல் என்ற ஒரு மகளும் இருந்தனர். மதுப் முத்கல் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞராகவும், கந்தர்வா மகாவித்யாலயாவின் தற்போதைய முதல்வராகவும் இருக்கிறார். முகுல் முத்கல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியாவர். [7] மாதவி முத்கல் இவரது மகள் ஒடிசி நிபுணராவார். [8] முதுப் மற்றும் மாதவி இருவரும் பத்மசிறீ பெற்றவர்கள். [9] இவரது இசைப் பின்தொடர்தல் பசீர் அலி தயாரித்த 2002 ஆம் ஆண்டு ஆவணப்படமான, பிரதித்வானி - எக்கோஸ் என்பதில் வெளிபட்டது. இது மோகன் நட்கர்னி, நௌசாத், வசந்த் பலூசுகர், ரவி சங்கர் போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்களையும் மையமாகக் கொண்டுள்ளது. [10]
இவர், 1995 இல் இறந்தார். [11]