வினோத் குமார் குப்தா

வினோத் குமார் குப்தா (Vinod Kumar Gupta, 10 செப்டம்பர் 1947 – 15 பெப்ரவரி 2025) என்ற வி. கு. குப்தா ஓர் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதியும், சார்க்கண்டு உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியுமாவார்.

தொழில்

[தொகு]

குப்தா தனது ஆரம்பக் கல்வியை உத்தரப் பிரதேசத்திலும், காந்தி நினைவு அறிவியல் கல்லூரி, ஜம்மு காஷ்மீரிலும் படித்தார். இவர் இளங்கலைச் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1970-இலிருந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். குப்தா தனது வழக்கறிஞர் பணியில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைமை வழக்கறிஞராகவும், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் மூத்த மத்திய அரசின் நிலை வழக்கறிஞராகவும் பணியாற்றினார். இவர் சட்டக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர். சட்டக்குழுவின் தலைவர், செயலாளர் பதவிகளை வகித்தார். 1990-இல், குப்தா ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்ட[1] இவர் 1996-இல் கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் 15 நவம்பர் 2000-இல் சார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் இந்த உயர் நீதிமன்றத்தின் முதல் நிரந்தர தலைமை நீதிபதியாக 2000 திசம்பர் 5 அன்று பதவியேற்றார்.[2] இதன் பிறகு நீதிபதி குப்தா 2003-இல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியில் சேர்ந்தார். பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் 2 பிப்ரவரி 2008 முதல் செப்டம்பர் 2009 வரை உத்தராகண்டு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "High Court of Jammu and Kashmir". Retrieved 18 October 2018.
  2. "Hon'ble Mr.Justice V.K.Gupta". Retrieved 18 October 2018.
  3. "Former Chief Justices". hphighcourt.nic.in. Retrieved 18 October 2018.