வின்ஜாமுரி சீதா தேவி (Vinjamuri Seetha Devi) இவர் ஓர் இசைக்கலைஞரும், வானொலி வர்ணனையாளரும், பாடகரும் மற்றும் தெலுங்கு நாட்டுப்புற இசைக் கலைஞரும் ஆவார். பிரபல நாட்டுப்புற கலைஞரான இவர் ஆர்மோனியக் கலைஞரும், இசை அமைப்பாளரும் மற்றும் எழுத்தாளருமான வின்ஜாமுரி தனது 99 வயதில் அமெரிக்காவில் ஹியூஸ்டனில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரைச் சுற்றியுள்ள இலக்கிய மற்றும் கலாச்சார சூழல் சீதாதேவியின் குழந்தை பருவத்தில் தனது சகோதரி அனுசுயாவுடன் பாரம்பரிய இசையை கற்றுக் கொண்டார். பின்னர் சகோதரிகள் தங்கள் தாய் மாமாவான புகழ்பெற்ற கவிஞர் தேவுலப்பள்ளி கிருட்டிணா சாஸ்திரியின் பல இசை அமைப்புகளுக்கு குரல் கொடுத்தனர்.
ஒரு குழந்தை மேதையாகவும் திறமையான பாடகி, சீதாதேவி தனது 8 வயதில் தனது பாடல்களின் கிராமபோன் பதிவோடு தனது பாடலை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, ஒரு ஏழு தசாப்தங்களாக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கேட்போரின் மகிழ்ச்சிக்காக இவர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாயுள்ளார்.
இந்திய மேடை நடிகரும், தெலுங்கு-சமஸ்கிருத பண்டிதரும், எழுத்தாளருமான விஞ்சமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ் என்பவருக்கு 1920 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி காக்கிநாடாவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு நாடகக் கலைஞராக இருந்தார். மேலும். அவர் பெண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை மொழிகளைக் கற்கவும் இலக்கியம் படிக்கவும் ஊக்குவித்தார். [1] கலா பிரபூர்ணா விருதைப் பெற்ற இவர், தனது எட்டு வயதிலேயே முதல் கிராமபோன் சாதனையைப் பெற்ற ஒரு குழந்தை மேதையாவார். காக்கிநாடாவில் பிறந்து வளர்ந்த வின்ஜமுரி, பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதை ஒரு தடை என்று சமூகம் கருதிய நாட்களில் சமூக சமத்துவத்தின் செய்தியை பரப்புவதற்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர்.
இவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார் மற்றும் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு மற்றும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முன்னால் தனது திறமையை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவரது மாமா தேவுலப்பள்ளி கிருட்டிணா சாஸ்திரி எழுதிய பிரபலமான தேசபக்தி பாடலான “ஜெய ஜெய ஜெய பிரிய பாரதி” என்ற பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார்.
தேவி அகில இந்திய வானொலியில் நாட்டுப்புற இசை தயாரிப்பாளராக இருந்தார். [2]
இவரது சகோதரி வின்ஜாமுரி அனுசுயா தேவியுடன் இணைந்து ஆந்திராவின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்களில் திருவரங்கம் சீனிவாச ராவ் என்பவரும் அடங்கும். [3] இவரது தாய் மாமா கிருட்டிண சாஸ்திரி பிரம்ம சமாஜத்தில் ஒரு ஆர்வத்தை வளர்த்து, சமூக மறுமலர்ச்சிக்காக பணியாற்றி அந்த அமைப்புக்கு பாடல்களை எழுதினார். இவர்கள் பல பொதுக் கூட்டங்களில் அந்தப் பாடல்களைப் பாடினர். [4]
இவர் சமீபத்தில் தனது இரண்டு புத்தகங்களான பாவ கீதலு மற்றும் நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டார். 1977 ஆம் ஆண்டில் ஆந்திர பல்கலைக்கழகத்த்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பாரிஸில் ‘நாட்டுப்புற ராணி’ என்ற விருதும் பெற்றுள்ளார்.
1979 ஆம் ஆண்டு வெளியான மாபூமி என்றத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் "ஆந்திராவின் நாட்டுப்புற இசை"யைப் பற்றி எழுதினார். இவர் 2016 மே 17 அன்று அமெரிக்காவில் ஹியூஸ்டனில் இறந்தார். [5]