விபா சரஃப் | |
---|---|
Vibha Saraf performing in 2018 | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா |
இசை வடிவங்கள் | காஷ்மீர நாட்டுப்புறப் பாட்டு |
தொழில்(கள்) | பாடகர் பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 2017 முதல் தற்போது வரை |
விபா சரஃப் (Vibha Saraf) இவர் ஓர் இந்திய பாடகரும், பாடலாசிரியரும் மற்றும் பாலிவுட் பின்னணி பாடகியுமாவார். இவர் நாட்டுப்புற பாடல்களை நிகழ்த்துகிறார். மேலும் ஒலிப்பதிவுகளுக்கு இசை எழுதுகிறார், இசைக்கிறார். முதன்மையாக காஷ்மீர் நாட்டுப்புற ஈர்க்கப்பட்ட பாடல்களுக்கு எழுதுகிறார். 64 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படத்தை வென்ற ராசி, மற்றும் 2019 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய நான்காவது படமான கல்லி பாய் ஆகிய படங்களுக்கான ஒலிப்பதிவுகளில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 2019ஆம் ஆண்டில், ஹர்ஷதீப் கவுருடன் 65 வது பிலிம்பேர் விருதுகளுக்கான சிறந்த பெண் பின்னணி பாடகராகவும், 2018இல் வெளியான ராசியில் இருந்து தில்பரோ பாடலுக்கான 20 வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகளுக்கான சிறந்த பெண் பின்னணி பாடகியாகவும் பரிந்துரைக்கப்பட்டார்.. [1] [2]
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் சிறீநகரின் ஃபதே கடால் பகுதியில் விபா சரஃப் பிறந்தார். சரஃப்பிற்கு மூன்று வயதாக இருந்தபோது இப்பகுதியில் இருந்து காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேறியபோது, இவரது குடும்பமும் இந்தியாவின் புது தில்லிக்கு இடம்பெயர்ந்தது. [3] [4]
இவர் சிறீராம் பாரதிய கலா மையத்தில் இசைக்காக பயிற்சி எடுக்கத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் பாப் இசையைப் படிப்பதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் இந்துஸ்தானி இசையைப் படித்தார். சரஃப் இசையைத் தொடங்குவதற்கு முன் ஐந்து ஆண்டுகள் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றினார். [5]
2013ஆம் ஆண்டில், சரஃப் தனது இசை வாழ்க்கையைத் தொடர மும்பைக்குச் சென்றார். [4] ஒரு வருடம் கழித்து, இவர் தனது முதல் ஒலிப்பதிவு பாடலை பதிவு செய்தார், அரிஜித் சிங்குடன் "ஓ சோனியே" என்ற தலைப்பில் டைட்டூ எம்பிஏ என்றத் திரைப்படத்தில் இடம் பெற்றது . அடுத்த ஆண்டு, 2015ஆம் ஆண்டில், குஜ்ஜுபாய் தி கிரேட் என்ற ஒலிப்பதிவுக்காக அத்வைத் நெம்லேகருடன் இணைந்து "ஃபீலிங் அவ்னவி" என்ற பாடலை பாடினார்.
இவர் தனது முதல் தனிப்பாடலான "ஹர்மோக் பார்டல்" என்பதை 2016 இல் வெளியிட்டார். காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் இசையை கொண்டாட சரஃப் தேர்ந்தெடுத்த காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பஜனை, சரப் இந்த பாடலை மறுஆக்கம் செய்தார். தபஸ் ரெலியா இசையமைத்து, அஸ்வின் சீனிவாசன் புல்லாங்குழல் மற்றும் அங்கூர் முகர்ஜி, கித்தார் வாசித்தனர். [4] [5]
2018 இல், சரஃப் "தில்பரோ" என்றப் பாடலை ராசி படத்திற்காக பாடினர். இந்த பாடலை சங்கர்-எஹான்-லோய் எழுதியிருந்தார். மேலும் காஷ்மீர் நாட்டுப்புற திருமண பாடலான "கான்மோஜ் கூர்" ஆல் ஈர்க்கப்பட்டது. [3] 2019ஆம் ஆண்டில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். [2]
காஷ்மீர், ஜம்மு மற்றும் லடாக் ஆகியவற்றின் பாரம்பரிய இசையால் சரஃப்பின் இசை செல்வாக்கு பெற்றது. தனது தாத்தா, பாட்டி மற்றும் தாயார் பாடியது போல, வளர்ந்து வந்த சரஃப், காஷ்மீரி இசையை தன்னுள் "ஆழ் மனதில்" ஆக்கியதாக மேற்கோள் காட்டுகிறார். [3] பாடல்களில் உள்ள சூபித்துவத்தை அதிகமான மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இவர் விரும்புகிறார். [5] ஹப்பா கட்டூன் மற்றும் லல்லேஸ்வரி ஆகியோரின் கவிதைகள் உட்பட காஷ்மீர் இலக்கியங்களிலும் இவர் உத்வேகம் பெறுகிறார் .