முதல் அடுக்கு ஆட்சிப் பிரிவில், வியட்நாம் 58 மாகாணங்களாகவும் (தின்) 5 மாநகராட்சிகளாகவும் (தான்போதிரூசு துவோசுதிரங் ஊவோங்) பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் வியட்நாமில் உயரிய தரவரிசை மாநகரங்களாகும்.[1] இது மாகாணத் தகுதி கொண்டது. இது அரசின் நேரடி மையக் கட்டுபாட்டில் உள்ளது.
இவை நகரக மாவட்டங்களாகவும் நகரியங்களாகவும் ஊரக மாவட்டங்களாகவும் இரண்டாம் ஆட்சியடுக்கில் பிரிக்கப்படுகின்றன. மூன்றாம் ஆட்சியடுக்கில், நகரக மாவட்டங்கள் (குவான்) சிறகங்களாகவும் (பூவோங்) நகரியம் சிறகங்களாகவும் குமுகங்களாகவும் (திசா) ஊரக மாவட்டங்கள் (குயேன்) நகரியங்களாகவும் (தித்திரான்) குமுகங்களாகவும் (சா) பிரிக்கப்படுகின்றன.
மாநகராட்சி | வகை | ஆட்சி வட்டாரம் | மக்கள்தொகை (2009 கணக்கெடுப்பு) |
அடர்த்தி (/கிமீ²) |
பரப்பளவு (km²) |
பிரிவுகள் |
---|---|---|---|---|---|---|
கனாய் | சிறப்பு வகுப்பு | சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை | 7,067,000 | 1,943.4 | 3,344.7 | கனாய் ஆட்சிப் பிரிவுகள் |
ஓ சி மின் நகரம் | சிறப்பு வகுப்பு | தென்கிழக்கு வட்டாரம் | 7,891,411 | 3,419 | 2,095 | ஓ சி மின் நகர் ஆட்சிப் பிரிவுகள் |
சாந்தோ | முதல் வகுப்பு | மேகாங் கழிமுகப் படுகை | 1,237,300 | 807 | 1,389.6 | சாந்தோ ஆட்சிப் பிரிவுகள் |
தா நாங் | முதல் வகுப்பு | நடுவண் தெற்குக் கடற்கரை | 1,007,000 | 599 | 1,256 | தா நாங் ஆட்சிப் பிரிவுகள் |
கைபோங் | முதல் வகுப்பு | சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை | 1,946,000 | 1,250.1 | 1,507.57 | கைபோங் ஆட்சிப் பிரிவுகள் |