வியாசர்பாடி, சென்னை | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 13°07′06″N 80°15′34″E / 13.118400°N 80.259400°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 31 m (102 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600039 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | பெரம்பூர், ஜமாலியா, ஓட்டேரி, பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், தண்டையார்பேட்டை, கொண்டித்தோப்பு, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர் மற்றும் மண்ணடி |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
வியாசர்பாடி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்,[1] 13°07'06.2"N, 80°15'33.8"E (அதாவது, 13.118400°N, 80.259400°E) என்ற புவியியல் ஆள்கூறுகளைக் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பெரம்பூர், ஜமாலியா, ஓட்டேரி, எருக்கஞ்சேரி, பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், தண்டையார்பேட்டை, கொண்டித்தோப்பு, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர் மற்றும் மண்ணடி ஆகியவை வியாசர்பாடிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
சாலை வசதிகள் அதிகம் கொண்டு, அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்தும் பேருந்து சேவைகள் வியாசர்பாடி வழியாக இயக்கப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள வியாசர்பாடி ஜீவா தொடருந்து நிலையம் ஒரு புறநகர் இரயில் நிலையம். இதன் மூலம் இங்குள்ள மக்கள் பயன் பெறுகின்றனர். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலுள்ள பெரம்பூர் தொடருந்து நிலையம், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணிப்பதற்கு ஏதுவாக, பல தொடருந்துகள் நின்று செல்லும் வகையில் பலனளிக்கிறது. இந்தியா முழுவதும் பயணம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், வியாசர்பாடியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ளது. வியாசர்பாடியிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்திலுள்ள பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஒரு முக்கிய சந்திப்பு தொடருந்து நிலையமாகும். மேலும், இங்கிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமையப் பெற்றுள்ளது.
வியாசர்பாடியில் நிறுவப்பட்ட விவேகானந்தா வித்யாலயா[2] பள்ளி மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சி. பி. எஸ். இ. பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.[3]
தமிழ்நாடு அரசின் கலைக் கல்லூரியான டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வியாசர்பாடியில் அமைந்து, 50 ஆண்டுகளைக் கடந்து பயனளித்துக் கொண்டிருக்கிறது.[4][5]
வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோயில்,[6] கரை காத்த இராமர் கோயில்,[7] பாலாத்தம்மன் கோயில்,[8] தேவி கருமாரி அம்மன் கோயில்,[9] பாலதண்டாயுதபாணி கோயில் [10] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களாகும்.
வியாசர்பாடியில் விளையாட்டு மைதானங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. கால்பந்து விளையாட்டில் அதிக கவனம் செலுத்துகின்றனர் இங்குள்ள விளையாட்டு வீரர்கள்.[11]