வில்லியனூர் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | புதுச்சேரி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 65 km2 (25 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 34,383 |
• அடர்த்தி | 530/km2 (1,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 605 110 |
தொலைபேசிக் குறியீடு | 91413 |
வாகனப் பதிவு | PY-05 |
வில்லியனூர் (Villianur), இந்தியாவின், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இது ஒரு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் புதுச்சேரி மாவட்டத்தின், வில்லியனூர் வட்டத்தின் தலைமையகம் ஆகும். இங்கு புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் ஆனது, இந்நகரத்தின் முக்கிய அடையாளமாகும்.[1]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வில்லியனூர் நகரின் மக்கள் தொகை 34,383 ஆகும்.[2] புதுச்சேரி மற்றும் உழவர்கரைக்கு அடுத்தபடியாக புதுச்சேரி மாவட்டத்தில், இது மூன்றாவது பெரிய நகரமாகும்.
வில்லியனூர் ஆனது, புதுச்சேரி நகரிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில், விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 45A இல் அமைந்துள்ளது. இது புதுச்சேரி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். இங்கிருந்து விழுப்புரம் 31 கி.மீ தொலைவிலும் மற்றும் கடலூர் 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இந்த நகரம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]
இந்நகரம், விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 45A இல் அமைந்துள்ளதால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும், இந்நகரின் வழியாக நின்று செல்கிறது. இங்கிருந்து கடலூருக்கும் பேருந்து செல்கிறது.
இந்நகரில் ஒரு தொருந்து நிலையம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பயணிகள் தொடருந்தும் இங்கு நின்று செல்கிறது.
இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.