வில்லியம் எர்பெர்ட் கிரீவ்சு William Herbert Greaves | |
---|---|
பிறப்பு | 10 செப்டம்பர் 1897 |
இறப்பு | 24 திசம்பர் 1955 | (அகவை 58)
துறை | வானியல் |
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | எடின்பர்கு பல்கலைக்கழகம் |
விருதுகள் | அரசு கழக ஆய்வுறுப்பினர்[1] அரசு பொறியியல் ஆய்வுறுப்பினர்[2] (2013) |
துணைவர் | கரோலின் கிரேசு கிட்டோ[சான்று தேவை] |
பிள்ளைகள் | ஜார்ஜ் இரிச்சர்டு எர்பெர்ட் கிரீவ்சு[சான்று தேவை] |
பேரா. வில்லியம் மிச்செல் எர்பெர்ட் கிரீவ்சு (William Michael Herbert Greaves) அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும்[1] அரசு பொறியியல் ஆய்வுறுப்பினரும்[2] (10 செப்டம்பர் 1897 – 24 திசம்பர் 1955) பிரித்தானிய வானியலாளரும் ஆவார்.[3][4] இவர் விண்மீன்களின் கதிர்நிரல் ஒளிப்படவியல் பணிக்காக மிகவும் பெய்ர்பெற்றவர்.
இவர் மேற்கிந்திய பர்போதாசு தீவில் பிறந்தார். இவரது தந்தையர் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பயிற்சிபெற்ற மருத்துவர் ஈ. சி. கிரீவ்சு ஆவார். இவர் பர்போதாசில் இருந்த இலாட்ஜ் பள்ளியிலும் கோடுரிங்டன் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் புனித ஜான் கல்லூரியில் பயில, இங்கிலாந்து சென்றார். இங்கே இவர் 1919 இல் முதுகலை பட்டம் பெற்றார்; 1920 இல் அங்கே ஆய்வுறுப்பினரும் ஆனார்.
இவர் 1921 இல் அரசு வானியல் கழகத்து அய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1924 இலிருந்து 1938 வரை கிரீன்விச் அரசு வான்காணக முதன்மை உதவியாளாக இருந்தார்.[3] இவர் 1938 இல் இசுகாட்லாந்து அரசு வனியலாளரானார்; இவர்1939 இல் எடின்பர்கு அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது முன்மொழிவாளர்களாக ஜேம்சு பிக்கரிங் கெண்டால், மாக்சு போர்ன், எடுமண்டு தய் மாந்து, உரூரில் விரிகுலி, எடுவின் ஆர்த்தர் பேக்கர், சர் எடுமாண்டு டெய்லர் விட்டேக்கர் ஆகியோர் அமைந்தனர். இவர் 1940 இலிருந்து 1945 வரை இக்கழகச் செயலாளராகவும் பின்னர், 1946 இலிருந்து 1949 வரை அதன் துணைத்தலைவராகவும் விளங்கினர்.[5]
இவர் 1955 வரை அரசு வானியலாளராகவும் எடிபர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் தகைமைப் பேராசிரியராகவும் இருந்தார். இவர் 1943 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பின்னர், 1947 இலிருந்து 1949 வரை அரசு வானியல் கழகத் தலைவராக இருந்துள்ளார்.[3]
இவர் 1955 திசம்பர் 24 இல் எடின்பர்கு பிளாக்போர்டு மவ்ட்டத்தில் இறந்தார்.
இவர் 1926 இல் கரோலின் கிரேசு கிட்டோவை மண்ந்தார். இவர்களுக்கு ஜார்ஜ் இரிச்சர்டு எர்பெர்ட் கிரீவ்சு(1941-2008) என ஒரு மகன் உண்டு. இவர் கார்டிப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் உயர்விரிவுரையாளரானார்.