வில்லியம் கானலே | |
---|---|
மே 2008 இல் கானலே | |
பிறப்பு | வில்லியம் மைக்கேல் கானலே 12 ஏப்ரல் 1964 |
தேசியம் | பிரித்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
பணி | மென்பொருள் பொறியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
அறியப்படுவது | காலநிலை பற்றிய வலைப்பதிவிற்காக |
பிள்ளைகள் | 2 |
வில்லியம் மைக்கேல் கானலே (William Michael Connolley பிறப்பு: ஏப்ரல் 12, 1964) ஒரு பிரித்தானிய மென்பொருள் பொறியாளர், எழுத்தாளர் மற்றும் காலநிலை பற்றிய வலைப் பதிவர் ஆவார். டிசம்பர் 2007 வரை இவர் அண்டார்டிக் காலநிலை இயற்பியல் அறிவியல் பிரிவில் மூத்த அறிவியல் அதிகாரியாகவும், பிரித்தானிய அண்டார்டிக் சர்வே எனும் திட்டத்தில் பூமி அமைப்பு பற்றிய குழுவில் இடம் பெற்றிருந்தார். பின்னர் கேம்பிரிட்ஜ் சிலிக்கான் வானொலியின் மென்பொருள் பொறியாளரானார்.
கானலே கணிதத்தில் இளங்கலை பட்டமும் , ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் செயின்ட் எட்மண்ட் ஹாலில் எண்கணித பகுப்பாய்வு குறித்த பணிக்காக முனைவர் பட்டம் பெற்றார்.[1] கேம்பிரிட்ஜ் சிலிக்கான் ரேடியோவின் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார், உட்பொதிக்கப்பட்ட நிகழ்நிரலை இவர் வடிவமைக்கிறார்.[2]
கானலே 2003 இல் விக்கிபீடியாவில் தொகுக்கத் தொடங்கினார் [3] மற்றும் 2006 முதல் 2009 வரை விக்கிபீடியா நிர்வாகியாக பணியாற்றினார்.[4] இவர் விக்கிப்பீடியாவில் செய்த தொகுப்புகளுக்காகப் பரவலாக அறியப்பட்டுள்ளார். குறிப்பாக காலநிலை மாற்றங்கள் தொடர்பாக அறியப்படுகிறார். பகுதியில் அவர் திருத்தியமை தொடர்பாக. மேலும் நேச்சர் (இதழ்) விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையைப் பற்றிய டிசம்பர் 2005 ஆம் ஆண்டின் மதிப்பாய்வில், இவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.[5]
கானேவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
through 2017