வில்லியம் கிறித்தி

சர் வில்லியம் கிறித்தி
பிறப்பு(1845-10-01)1 அக்டோபர் 1845
வுல்விச், இலண்டன்
இறப்பு22 சனவரி 1922(1922-01-22) (அகவை 76)
கிப்ரால்ட்டர் கடலருகே
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்
அறியப்படுவதுஇராயல் வானியலாளர்

சர் வில்லியம் என்றி மகோனி கிறித்தி (Sir William Henry Mahoney Christie) (1 அக்தோபர் 1845 – 22 ஜனவரி 1922) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1]

இவர் இலண்டன் நகர வுல்விச்சில் பிறந்தார், இவரது தந்தையார் சாமுவேல் குன்டர் கிறித்தி ஆவார். இவர் அரசர் கல்லூரி பள்ளியிலும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் 1868 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நான்காம் மல்வீர்ர் ஆனார். இவர் 1869 இல் டிரினிட்டி ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

இவர் 1870 இலிருந்து 1881 வரை கிரீன்விச் அரசு வான்காணகத் தலைமை உதவியாளராக இருந்த பிறகு, 1881 இல் ஜார்ஜ் பிடெல் ஐரிக்குப் பதிலக எட்டாம் அரசு வானியலாளராகப் பணியமர்த்தப்பட்டு, 1910 வரை அலுவலில் இருந்தார். இவர் 1902 இல் ஆக்சுபோர்டு ப்ல்கலைக்கழகத்தில் இருந்து தகைமை முதுமுனைவர் பட்டம் பெற்றார்,[3] and was created a Knight Commander of the Order of the Bath (KCB) in 1904. இவர்1881 ஜூனில் அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் 1888 இலிருந்து 1890 வரை அரசு வானியல் கழகத் தலைவராக இருந்தார்.[5]

இவர் தான் 65 ம் கவையில் ஓய்வுபெற்ற முதல் இராயல் வானியலாளர் ஆவார். ஐரி, ஜன் போண்டு தவிர, மற்ற அரசு வானியலாளர்கள் அலுவலில் உள்ளபோதே இறந்துபோயினர்போண்டி 1835 இல் உடல்நலிவால் இறந்தார். ஐரி தன் 81 ஆம் அகவையில் இறந்தார். கிறித்தி 1922 இல் இறந்தார்; கிப்ரால்ட்டர் கடலின் அருகே அடக்கம் செய்யப்பட்டார். இவர் 1881 இல் சர் ஆல்பிரெடு கிக்மன் மகளாகிய மேரி வயலெட்டை மண்ந்தார்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Christie, Sir William Henry Mahoney". Who's Who 59: 331. 1907. https://books.google.com/books?id=yEcuAAAAYAAJ&pg=PA331. 
  2. "Christie, William Henry Mahoney (CHRY863WH)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  3. "University intelligence". The Times (London) (36789): p. 12. 9 June 1902. 
  4. "Library and Archive Catalogue". Royal Society. Archived from the original on 15 August 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
  5. "LIST OF PRESIDENTS AND DATES OF OFFICE". A brief history of the RAS. Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 10 September 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]