வில்லியம் ரெஜினால்ட் டீன் (1896–1973) ஒரு ஆங்கிலேய பயன்முறைக் கணக்கியலாளா் மற்றும் பாய்ம இயக்கவியலாளா். ஆராய்ச்சியில் இவரது ஆர்வம் ஸ்டோக்[தெளிவுபடுத்துக] பாய்வு , திண்ம இயக்கவியல் மற்றும் வளைந்த நீரிடைவழிகளில் பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. இவரது பெயரைக் கொண்டிருப்பது பாய்மவியலில் பயன்படும் டீன் எண்ணாகும்.
தாழ்வான ரேய்னால்ட்ஸ் எண்களில், மீட்சிப்பண்பின் வழிமுறைகளைச் செயல்படுத்தி பாய்மங்களின் ஓட்டத்தைப் பற்றிய முன்னோடி வேலையை டீன் மேற்கொணடார். வளைந்த குழாய்களில் சுவற்றுடனான இடைவெளியால் சுவற்றினருகில் செதுக்கோட்டத்தில் ஏற்படும் அலைக்கழிப்பு, மூலையில் ஏற்படும் ஓட்டம் போன்ற இரண்டாம் நிலை பாய்வோட்டத்துக்கான தீர்வுகள் இவருடைய புகழ்பெற்ற படைப்புகளாகும்.[1]
டீன், கேம்பிாிட்ஜிலுள்ள திரித்துவக் கல்லுாரியில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றாா். இம்பீரியல் கல்லுாரியில் ஐந்து ஆண்டுகள் கழித்த பின் திரித்துவக் கல்லுாரியின் ஓா் உயரிய ஆய்வாளரானார். போாின் போது M.I.D.ன் எதிா் வளியூர்தி பரிசோதனைப் பிரிவில் கணிதம் சாா்ந்த பணிகளை இவர் மேற்கொண்டாா்.[2] இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1964ல் இங்கிருந்து தான் ஓய்வு பெறும்வரை பயன்முறைக் கணிதத்துறையில் கோல்ட்ஸ்மிட் இருக்கையையும்[3], அரிசோனா பல்கலைகழகத்தில் ஓர் இருக்கையையும்[1] வகித்துவந்தார்.