விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள் என்பவை விவசாயம குறித்தும், விவசாயத்திற்கு உதவும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாயம் குறித்தும் உள்ள பாடத்திட்டங்களைக் கொண்டு இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வியை அளிக்கும் கல்லூரிகள் விவசாயக் கல்லூரிகள் என்றும், தோட்டக்கலைப் பயிர்கள் குறித்தும், தோட்டக்கலைப் பயிர் வளர்ப்பு குறித்தும் உள்ள பாடத்திட்டங்களை கொண்டு நடத்தப்படும் கல்லூரிகள் தோட்டக்கலைக் கல்லூரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1][2][3]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கிள்ளிகுளம் (திருநெல்வேலி), பெரியகுளம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள 11 கல்லூரிகளில் 10 பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளும், 29 பிரிவுகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளும் உள்ளன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற இளநிலைப் பட்டப்படிப்புகளை மட்டும் கொண்ட மூன்று சுயநிதி விவசாயக் கல்லூரிகள் உள்ளன. அவை;
Stephen Babcock established the first 'Dairy School' in the nation in 1890.