விவேகானந்த கேந்திரம் என்பது ஒரு இந்து ஆன்மீக நிறுவனமாகும். சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பரப்ப, ஜனவரி 7 1972 ல் ஏக்நாத்ஜி ரானாடேவால் கன்னியாகுமரியில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் மூலம் யோக வகுப்புகளும், பண்பாட்டு வகுப்புகளும், ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆளுமைதிறன் பயிற்சி முகாம்களும் தொடர்ந்து பல மாநிலங்களில் நடத்தப்படுகின்றன.[1][2][3]
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. இதன் சார்பாக விவேகானந்த நினைவுக் கண்காட்சி, விவேகானந்தர் நினைவு மண்டபம் போன்றவை பராமரிக்கப்படுகிறது மேலும் பல்வேறு இடங்களில் கல்விக் கூடங்களும் நடத்தப்படுகிறது. இதன் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் போன்றவை பல்நோக்குப் பார்வை கொண்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
விவேகானந்த கேந்திர பிரகாஷன் அறக்கட்டளை மூலம் பல்வேறு நூல்களும், இதழ்களும் வெளியிடப்படுகின்றன.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலுக்குரிய 108 புனித தீர்த்தங்களில், அறுபதுக்கும் மேற்பட்ட தூர்ந்து போன தீர்த்தக் குளங்களை விவேகானந்தா கேந்திரம் தொண்டு புனரமைத்தது. இதற்காக 2022-ஆம் ஆண்டில் ஜல் சக்தி துறையின் தேசிய விருது கிடைத்துள்ளது.[4]