விவேக் தேவ்ராய் | |
---|---|
![]() தலைவர், இந்தியப் பிரதமரின் பொருளாதாரக் குழுவின் தலைவர் | |
பிறப்பு | சில்லாங், அசாம், இந்தியா | 25 சனவரி 1955
இறப்பு | 1 நவம்பர் 2024 புது தில்லி, இந்தியா | (அகவை 69)
இருப்பிடம் | புதுதில்லி, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இராமகிருஷ்ணா மிஷனரி பள்ளி, நரேந்திரபூர் மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா தில்லி பல்கலைக்கழகம் திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் |
பணி | பொருளாதார அறிஞர் |
குறிப்புகள் | |
விவேக் தேவ்ராய் (Bibek Debroy, 25 சனவரி 1955 - 1 நவம்பர் 2024)[1] இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தவரும், பொருளாதார அறிஞரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆவார். புதுதில்லியில் உள்ள பொருளாதாரக் கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியராக 2007 முதல் 2015 வரை பணியாற்றியவர். 25 செப்டம்பர் 2017ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.[2]
விவேக் தேவ்ராய், பள்ளிக் கல்வியை நரேந்திரபூர் இராமகிருஷ்ணா மிஷனரி பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தாவிலும், உயர் கல்வியை தில்லி பல்கலைக்கழகம் மற்றும் திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்ஜிலும் பயின்றவர். மேலும் விவேக் தேவ்ராய் அப்ளிகேஷன் எகனாமிக்ஸ் ரிசர்ச் தேசிய கவுன்சிலும், இராஜீவ்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் த காண்டம்பரல் ஸ்டடீஸ் நிறுவனத்திலும் ஆராய்ச்சிப் பணிகளை செய்துள்ளார்.
விவேக் தேவ்ராய் பிபெக் டெப்ராய், மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா, புனேவில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரி மற்றும் தில்லியில் உள்ள இந்திய வெளிநாட்டு வணிகக் கழகத்திலும் பேராசிரியராக பணிபுரிந்தவர்.
1993-1998 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதார ஆலோசகராக பணி புரிந்துள்ளார். 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை புதுதில்லியில் உள்ள பொருளாதார கொள்கைகள் ஆய்வு மையத்திலும், இந்திய வணிகம் மற்றும் தொழில்கள் சம்மேளனத்தின் செயலராகவும் பணியாற்றியுள்ளார். 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினராக உள்ளார்.[3][4][5][6] இந்திய இரயில்வே மறுசீரமைப்பதற்கான குழுவிற்கு தலைமை தாங்கி உள்ளார்.
விவேக் தேவ்ராய் 2015-ம் ஆண்டில் பத்மசிறீ விருதையும்[7], 2016-ம் ஆண்டில் அமெரிக்க- இந்திய வணிக உச்சி மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
மகாபாரத்தின் முதல் பத்து தொகுதிகளை இந்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும் பகவத் கீதையையும் ஹரி வம்சம் எனும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தற்போது பகவத் புராணத்தை மொழி பெயர்க்கும் பணியில் உள்ளார்.