விஷ்ணு கணேஷ் பிங்களே

விஷ்ணு கணேஷ் பிங்களே
விஷ்ணு கணேஷ் பிங்கிள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது
பிறப்புசனவரி 1888[1]
இறப்பு16 நவம்பர் 1915
லாகூர், பிரித்தானிய இந்தியா
மற்ற பெயர்கள்பாபுர்டே கணேஷ் பிங்கிள்
அமைப்பு(கள்)கதர் கட்சி
அரசியல் இயக்கம்சுதேசி இயக்கம், [இந்திய விடுதலை இயக்கம்]], கதர் சதித்திட்டம்

விஷ்ணு கணேஷ் பிங்களே (Vishnu Ganesh Pingle) (சனவரி 1888 - 16 நவம்பர் 1915) இவர் ஓர் இந்திய புரட்சியாளரும், கதர் கட்சியின் உறுப்பினருமாவார். இவர் கதர் சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்காக லாகூர் சதி விசாரணையைத் தொடர்ந்து 1915 இல் தூக்கிலிடப்பட்டவர்களில் ஒருவராவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் 1888 ஆம் ஆண்டில் மும்பை மாகாணத்தின் புனா மாவட்டத்திற்கு அருகிலுள்ள தாலேகான் தம்தேரே என்ற மராத்தி பிராமண குடும்பத்தில் பிறந்தார். [2] ஒன்பது உடன்பிறப்புகளில் இளையவரான இவர், ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்தார். ஒன்பது வயதில் தலேகான் தபாதேவிலுள்ள தொடக்கப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். 1905 ஆம் ஆண்டில், இவர் புனாவில் உள்ள மகாராட்டிர வித்யாலயாவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் அது மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இவர் இந்திய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கீழ் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். இருப்பினும், நிதி பற்றாக்குறை காரணமாக மகாராட்டிர வித்யாலயா மூடப்பட்டதைத் தொடர்ந்து இவர் 1908 இல் தலேகோன் தபதேவிலுல்ள்ள் சமார்த்த வித்யாலயாவுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், தேசியவாத இயக்கத்தில் இவரது ஆரம்பகால ஈடுபாடு ஒரு நீடித்த முத்திரையை விட்டுச் சென்றது.

1910 ஆம் ஆண்டில், சமார்த்த வித்யாலயாவும் பிரித்தானிய அரசாங்கத்தால் மூடப்பட்டது. இவர் மும்பைக்குச் சென்று கோவிந்தராவ் பொட்டாரின் முன்னோடி ஆல்காலி வேலைகளில் மாகிமில் வேலை பார்த்தார். திரு. பொட்டார் ஒரு தேசியவாதியாகவும், வெடிபொருட்களில் நிபுணராகவும் இருந்தார். தேசியவாதக் குழுவைச் சேர்ந்த அவர், இவரை தனது கூட்டாளிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களில் ஒருவர் வசாய் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி லட்சுமண் பாட்டீல் என்பவராவார். அவருடன் இவர் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். யப்பானிய கைத்தறித் தொழிலால் ஈர்க்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் உச்சத்தில், இவர் தனது சொந்த சிறிய சுதேசி தறியை லாத்தூருக்கு அருகிலுள்ள அவுசா என்ற இடத்தில் தொடங்கினார் . இருப்பினும், ஒரு பொறியாளராக இருக்க வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது. [2]

அமெரிக்கா

[தொகு]

அமெரிக்கச் சுதந்திரப் போரின் வரலாற்றால் இவர் பலமாக ஈர்க்கப்பட்டார். 1911 இல், இவர் அவுசாவை விட்டுஅமெரிக்காவிற்குச் சென்றார். இவர் தனது குடும்பத்திலிருந்து விலகுவதற்கான செய்தியை வைத்திருந்தார் என்றும், இரயில் நிலையத்தில் தனது திட்டங்களை தனது மூத்த சகோதரர் கேசவ்ராவிடம் மட்டுமே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் ஆங்காங் வழியாக அமெரிக்காவை அடைந்தார். மேலும் 1912 இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் மாணவராக சேர்ந்தார். [3] அமெரிக்காவில் இருந்தபோது, இவர் கதர் கட்சியுடன் தொடர்பு கொண்டு அதன் தீவிரமான தொழிலாளி ஆனார். முதலாம் உலகப் போர் ஐரோப்பாவில் ஆரம்பமானபோது, ஜெர்மனியர்கள், ஐரோப்பாவில் பெர்லின் குழுவிற்கும், அமெரிக்காவில் உள்ள கதரியக்கம் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவில் ஒரு கிளர்ச்சியை முயற்சிக்கும் திட்டங்கள் தொடங்கின.

கதர் சதி

[தொகு]

பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கதர் உறுப்பினர்களின் ( கர்த்தார் சிங் சரபா போன்றவர்கள்) நிறுவனத்தில் சத்யன் பூஷண் சென் ( ஜதின் முகர்ஜியின் தூதர்) போன்றோரை இவர் தெரிந்து வைத்திருந்தார். கதர் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பை பலப்படுத்தும் பணியாக, சத்யன் பூஷண் சென், கர்த்தார் சிங் சரபா, ஒரு தொகுதி சீக்கிய புரட்சியாளர்கள் ஆகியோருடன் இவரும் 1914 அக்டோபர் இரண்டாம் பாதியில் அமெரிக்காவிலிருந்து எஸ்.எஸ். சலாமின் அவர்களின் ஒத்துழைப்புக்காக டாக்டர் சுன் இ சியனைச் சந்தித்தனர். டாக்டர் சுன் ஆங்கிலேயர்களை அதிருப்தி செய்யத் தயாராக இல்லை. சத்யனும் கட்சியும் இந்தியாவுக்குப் புறப்பட்ட பிறகு, தகால் ஆத்மராம் கபூர், சந்தோஷ் சிங் மற்றும் சிவ் தயால் கபூர் ஆகியோரை தேவையான ஏற்பாடுகளுக்காக பாங்காக்கிற்கு அனுப்பினார். [4]

விசாரணையும் மரணதண்டனையும்

[தொகு]

இவரும், கர்த்தார் சிங் சரபா, ஹர்னம் சிங் மற்றும் பாய் பரமநந்த் உள்ளிட்ட பல கடாரியர்கள் ஏப்ரல் 1915 இல் லாகூர் சதி விசாரணையில் இந்திய பாதுகாப்புச் சட்டம் 1915 இன் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயத்தால் பிப்ரவரி சதித்திட்டத்தில் தங்கள் பாத்திரங்களுக்காக விசாரிக்கப்பட்டனர். [5] கர்த்ர் சிங்குடன் 1915 நவம்பர் 16 அன்று லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டபோது இவரும் தூக்கிலிடப்பட்டார். [6]

மரபு

[தொகு]

மத்திய மும்பை புறநகர்ப் பகுதியான சின்ச்போக்லியில் ஒரு தெருவிற்கு இவரது பெயரிடப்பட்டது. [7]

இவரது பேத்தி ரஜனி பாட்டீல் ஒரு அரசியல்வாதி ஆவார். அவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vishnu Ganesh Pingle – Bharatmatamandir" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.
  2. 2.0 2.1 "Ganesh Pingle, Sikh pioneers.org". sikhpioneers.org. Archived from the original on 2008-01-13. பார்க்கப்பட்ட நாள் 2008-01-02.
  3. "New, thinking, agile, and patriotic: "Hindu" students at the University of Washington, 1908-1915". University of Washington Libraries. Archived from the original on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2008-01-02.
  4. A.C. Bose, Indian Revolutionaries Abroad, pp. 87–8, p. 132. Statemt of Pingle and Mula Singh to Cleveland, d/31-3-1915, H.P. 1916, May 436-439B. Notes on Tahal, Roll 6, RG 118. Also, the Rowlatt Report §110, §121 and §138. And Bimanbehari Majumdar, Militant Nationalism in India, p. 167
  5. Chhabra 2005
  6. Sreenivasan R. "Across a chasm of seventy five years, the eyes of these dead men speak to today's Indian American". rediff. பார்க்கப்பட்ட நாள் 2008-01-02.
  7. "Pincode of Vishnu Ganesh Pingle Marg Chinchpokli East_". www.getpincode.info. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.

குறிப்புகள்

[தொகு]