விஷ்ணு சதாசிவ கோக்ஜே Vishnu Sadashiv Kokje | |
---|---|
விஷ்ணு சதாசிவ கோக்ஜே (இடது) இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் முகமது அமீது அன்சாரியுடன் | |
இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 8 மே 2003 – 19 சூலை 2008 | |
முன்னையவர் | சூரஜ் பான் |
பின்னவர் | பிரபா ராவ் |
பன்னாட்டு தலைவர், விசுவ இந்து பரிசத் | |
முன்னையவர் | இராகவ ரெட்டி |
பின்னவர் | இரவீந்திர நரேன் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 செப்டம்பர் 1939 மத்தியப் பிரதேசம் |
தேசியம் | இந்தியா |
கல்வி | இளங்கலைஇளங்கலைச் சட்டம் |
விஷ்ணு சதாசிவ கோக்ஜே (Vishnu Sadashiv Kokje)(பிறப்பு: செப்டம்பர் 6, 1939) ஓர் இந்தியச் சட்ட வல்லுநர் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக 8 மே 2003 முதல் 19 சூலை 2008 வரை பதவி வகித்தார்.[1] கோக்ஜே விசுவ இந்து பரிசத்தின் பன்னாட்டுத் தலைவராகவும் பணியாற்றினார்.
கோக்ஜே 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார். இந்தூரில் இளநிலை சட்டம் படிப்பை முடித்த பிறகு 1964-ல் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 1990 சூலை 28 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2001-ல் 11 மாதங்கள் இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் செப்டம்பர் 2002-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[2]
கோக்ஜே 8 மே 2003-ல் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு 19 சூலை 2008 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.[3] பாரத் விகாசு பரிசத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[4] ஏப்ரல் 14, 2018 அன்று, இவர் ஸ்ரீ ராகவ் ரெட்டிக்குப் பிறகு விசுவ இந்து பரிசத்தின் பன்னாட்டுத் தலைவராக ஆனார். பிரவின் தொகாடியா பன்னாட்டுச் செயல் தலைவராக இருந்தார். [1] இவர் 2002 ஜாகியா ஜாப்ரி வழக்கில் பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.