விசுவரூபம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கமல் ஹாசன் |
தயாரிப்பு | கமல் ஹாசன் சந்திர ஹாசன் |
கதை | கமல் ஹாசன் |
இசை | ஷங்கர்-எஹ்சான்-லாய் |
நடிப்பு |
|
கலையகம் | ராஜ்கமல் இன்டர்நேஷனல் |
விநியோகம் | ராஜ்கமல் இன்டர்நேஷனல் |
வெளியீடு | சனவரி 25, 2013 பெப்பிரவரி 7, 2013 தமிழ்நாட்டில் பெப்பிரவரி 1, 2013 இந்தி பதிப்பு | தமிழ்நாடு தவிர்த்து
ஓட்டம் | 147 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி |
ஆக்கச்செலவு | ₹ 95 கோடி ( US$ 17.29 மில்லியன்) [1] |
மொத்த வருவாய் | ₹ 220 கோடி[2] |
விசுவரூபம் 2013 இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார்.
விஸ்வநாதன்(கமல்) ஒரு கதக் கலை நிபுணர். ஆனால் அவருடைய நளினத்தின் பேரினாலும், தன்னுடைய அலுவலக முதலாளியின் பொருட்டு ஆசை கொண்டதனாலும் நிருபமா (பூஜா குமார்) தன் கணவரைப்பற்றி துப்பறிய ஒருவனை பின்தொடர செய்கிறாள். அவன், வேறு ஓர் இடத்தில் தவறி செல்ல, ஜிஹாதி தீவிரவாதிகளின் கூடாரத்தில் சிக்கிக்கொள்கிறான். அவன் மூலமாக நிருபமாவின் அலுவலகம் தங்களை துப்பறிய அனுப்பினார்களோ என்று சந்தேகப்பட்டு விஸ்வநாதன் மற்றும் நிருபமாவை அவர்கள் தங்கள் இடத்தில் அடைத்து விசாரிக்கின்றனர். விஸ்வநாதன் உண்மையில் ஓர் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர். விஸ்வநாதன் எவ்வாறு தப்பி செல்கின்றனர். என்ன நடந்தது என்பதை விறுவிறுப்புடன் கூறியுள்ளார் இயக்குநர்.
மன்மதன் அம்பு (2010) திரைப்படத்திற்கு பிறகு, கமல் ஹாசன் நவம்பர் 2010 இல் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் ஒரு திரைக்கதை எழுதியுள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அப்படம் மார்ச்சு 2011 இல் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். பின் 2011 இன் தொடக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்ற இருந்த திரைப்படத்தின் கதை பெயரிடப்படாத ஒரு வரிக் கதை என்றும் அந்த ஒரு வரிக் கதையில் ஆர்வம் கொண்டதால் அந்தப் படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறினார்கள். பின் இயக்குநர் செல்வராகவன் இயக்கும் மற்றொரு படமான இரண்டாம் உலகம் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்காக அந்த திட்டப்பணியில் இருந்து வெளியேறினார்.[3] அதன் பிறகு விஸ்வரூபம் திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்குவதாக செய்திகள் வெளியானது.
விசுவரூபம் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எடுத்து முடித்துவிட்டனர். படம் எடுக்கும் பொழுதே படத்தொகுப்பை உடனுக்குடன் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.[4] இதற்காக மென்பொறியாளர்களை கூடவே கமல் ஹாசன் வைத்துக்கொண்டார்.
இப்படத்தை நேரடி பரப்புகை செயற்கைக்கோள் வெளியிடுவதாக கமல் கூறியதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முதலில் அங்கு படம் திரையிடப்படாது என்றும் பிப்ரவரி 2ல் இருந்து நேரடி பரப்புகை செயற்கைக்கோள் வழியாக திரையிடப்படும் என கமல் அறிவித்தார்.[5] முசுலிம் அமைப்புகள் சில இப்படத்தில் முசுலிம்கள் தீவிரவாதியாக காட்டப்பட்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர், இது சமூக அமைதியை குலைக்கும் என அவர்கள் கூறினர்[6], பின்னர் இசுலாமிய சமூகத்தின் மனம் இப்படத்தால் புண்படும் என்றும் எனவே இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கோரினர் [6]. சட்டம் ஒழுங்கு இப்படத்தால் பாதிக்கப்படும் என கூறி தமிழக அரசு 15 நாட்களுக்கு இப்படத்திற்கு தடை விதித்தது [7]. ஆனால் இப்படம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் திரையிடப்படுவதில் சிக்கல் இருக்கவில்லை.
சிறந்த நடனம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு இரண்டிற்கும் 2012 ம் ஆண்டிற்கான இந்திய தேசிய விருதை பெற்றது.[8][9][10]